- Advertisement -
Homeபொழுதுபோக்குஹாரிஸ் ஜெயராஜ் மீது அபராதம் விதித்த நீதிமன்றம், சொகுசு கார் விவகாரத்தில் புதிய தீர்ப்பு…

ஹாரிஸ் ஜெயராஜ் மீது அபராதம் விதித்த நீதிமன்றம், சொகுசு கார் விவகாரத்தில் புதிய தீர்ப்பு…

- Advertisement -

90ஸ் கிட்ஸ்களின் விருப்பத்திற்குரிய இசையமைப்பாளரான திகழ்ந்து வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். 2000ங்களில் தமிழ்நாடு முழுக்கவே ஹாரிஸ் ஜெயராஜின் அலை வீசியது. எங்கு திரும்பினாலும் ஹாரிஸின் இசையே ஒலித்துக்கொண்டிருந்தது. எனினும் சமீப காலமாக ஹாரிஸ் ஜெயராஜ் அவ்வளவாக திரைப்படங்களுக்கு இசையமைப்பதில்லை. அதே போல் அவரது இசை முன்பு போல் துள்ளலாக இல்லை எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர். எனினும் காலம் உள்ளவரை ஹாரிஸ் ஜெயராஜின் இசை தமிழ் இசை உலகில் ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

இதனிடையே ஹாரிஸ் ஜெயராஜ் கடந்த 2010 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் இருந்து மசராட்டி என்ற சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். அந்த வாகனத்தை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

- Advertisement -

எப்போதும் ஒரு காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால் அதற்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என்பது விதி. ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் இறக்குமதி செய்த மசராட்டி காருக்கு நுழைவு வரி செலுத்தவில்லை என்று கூறி அவரது விண்ணப்பத்தை போக்குவரத்து துறை நிராகரித்தது. மேலும் இறக்குமதி செய்த காருக்காக ரூ. 13 லட்சத்து 7 ஆயிரத்து 923 நுழைவு வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸும் அனுப்பியது.

இதனை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிமன்றம் நுழைவு வரியுடன் சேர்த்து அபராதமாக ரூ. 11 லட்சத்து 50 ஆயிரத்து 952 செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இந்த அபராதத்தை செலுத்தும்படி நோட்டீஸும் அனுப்பியது.

- Advertisement -

இந்த அபராதத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். இந்த மனு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பிலான வக்கீல், காருக்கான நுழைவு வரி ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது எனவும், நுழைவு வரியுடன் அபராதத்தையும் செலுத்தும்படி உத்தரவிட்டது பாரபட்சமானது எனவும் வாதிட்டாராம். இதனை தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் ‘அபராதம் செலுத்த வேண்டும்’ என்ற தனி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு தற்போது உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

- Advertisement -

சற்று முன்