- Advertisement -
Homeபொழுதுபோக்குமறைந்த பாடல் ஆசிரியர் கவிஞர் நா முத்துக்குமார் குடும்பத்துக்கு உதவ வந்த தமிழ் திரைத்துறையினர்… இது...

மறைந்த பாடல் ஆசிரியர் கவிஞர் நா முத்துக்குமார் குடும்பத்துக்கு உதவ வந்த தமிழ் திரைத்துறையினர்… இது தரமான சம்பவமா இருக்குதே…?

- Advertisement -

கலைஞர்கள் கவிஞர்கள் எவ்வளவு திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலும் கலைத்துறையில் எவ்வளவு பெரிய சாதனைகளை நிகழ்த்தி இருந்தாலும் ரசிகர்களின் அபரிதமான அன்பை பெற்றிருந்தாலும் அவர்களது மறைவுக்கு பின் சில நாட்களில் சில வாரங்களில் சில மாதங்களில் ஏன் சில ஆண்டுகளில் அவர்களை சுத்தமாக மறந்து போய் விடுகின்றனர்.

இது சினிமா கலைஞர்கள், கவிஞர்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். மனிதர்கள் வாழும் வரை கொண்டாடும் ஒரு குடும்பம், அந்த சமூகம் அவரது மறைவுக்கு பின் கொஞ்ச நாட்களிலேயே அவர்களது நினைவுகளை மறந்து விடுகின்றனர். காலப்போக்கில் மனிதர்கள் வாழ்ந்த சுவடுகளே இல்லாமலும் போய்விடுகிறது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் தனது அற்புதமான பாடல்களால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நா முத்துக்குமார். ஆளுமை மிக்க சிறந்த கவிஞர். நல்ல பாடல் ஆசிரியர். அவரது பல பாடல்களை கேட்க கேட்க இன்றும் நெஞ்சுக்குள் தேன் ஊறும். பாடல்களில் உயிர்த்துவத்தை வெளிப்படுத்திய உன்னதமான கவிஞர்களில் நா முத்துக்குமாரும் ஒருவர்.

பாடல் ஆசிரியர் கவிஞர் நா முத்துக்குமாரிடம் அதிக நட்பு கொண்டிருந்தவர்கள் இயக்குனர்கள் ஏஎல் விஜய் லிங்குசாமி ராம் போன்றவர்கள். நா முத்துக்குமார் உடல் நலம் சரியில்லாத போதே அவருக்கு பல விதங்களில் அவருக்கு உதவி செய்தார். அவர் மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்துக்கு திரைத்துறை சார்ந்த வகையில் கிடைக்க வேண்டிய உதவிகளையும் பெற்றுத் தந்தார்கள்.

- Advertisement -

இந்த சூழலில், நா முத்துக்குமாரின் குடும்ப சூழல் மற்றும் அவரது குடும்பத்துக்கு உதவும் வகையில் இப்போது சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் வருகிற ஜூன் 5ம் தேதி ஆனந்த யாழ் என்ற இசை நிகழ்ச்சியை நடத்த அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களுடன் இணைந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் இந்த ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

வருகிற ஜூன் 5ம் தேதி நடைபெற உள்ள இந்த இசை நிகழ்ச்சியின் வாயிலாக வரும் மொத்த வருமானத்தையும் கொண்டு ரூ. 2.5 கோடி மதிப்பில் நா முத்துக்குமாரின் குடும்பத்துக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்கி தருகின்றனர். இப்படி இசை நிகழ்ச்சி நடத்தி அதில் வரும் மொத்த நிதியையும் ஒரு கவிஞனின் குடும்பத்துக்கு உதவும் வகையில் தமிழ் சினிமா துறையினர் மேற்கொண்டு வரும் இந்த அற்புதமான செயலை சினிமா துறை சார்ந்த மற்றவர்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்