லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் விஜய். இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், திரிஷா, பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே களமிறங்கியுள்ளது. அனிருத் இசையமைக்க 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ சார்பாக லலித்குமார் படத்தை தயாரித்திருக்கிறார்.
காஷ்மீரில் தொடங்கிய ஷூட்டிங் சென்னை மற்றும் திருப்பதியில் நடந்து சமீபத்தில் முடிவடைந்தது. அதனை லோகேஷ் கனகராஜ் அண்மையில் அதிகாரப்பூர்வமாக. அறிவித்திருந்தார். படமானது அக்டோபர் 19-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட அன்றே தெரிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் லோகேஷ் கனகராஜ் பக்கா பிளானோடு ஷூட்டிங் சென்று குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தையும் முடித்திருக்கிறார்.
படத்தின் ஷூட்டிங் முடிந்ததால் அதன் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரம் அடையத் தொடங்கியுள்ளன. பேட்ச் ஒர்க்குக்காக காஷ்மீர் சென்ற லோகேஷ் கனகராஜும் தமிழ்நாடு திரும்பிவிட்டார். வெளிநாட்டில் இருக்கும் விஜய் விரைவில் இந்தியா திரும்பி தனக்கான டப்பிங்கை கொடுத்து முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இப்போது லண்டனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் தொடர்பான க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. இதில் சஞ்சய்தத் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரையும் அர்ஜுன் ஹரோல்டு தாஸ் என்ற கதாபாத்திரத்தையும் ஏற்று இருக்கின்றனர். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அடுத்த மாதம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கலாம் என தெரிகிறது.
இந்நிலையில் படத்துக்கு பிற மாநிலங்களில் செக் வந்திருப்பதாக பேசப்படுகிறது. அதாவது பான் இந்தியா படமாக சோலோவாக வெளியாகி வசூலை அள்ளலாம் என திட்டமிட்டிருந்ததாம் படக்குழு. ஆனால் கர்நாடகாவில் அக்டோபர் 19ஆம் தேதி லியோ படத்துடன் சிவராஜ்குமார் நடித்த கோஸ்ட் படமும் வெளியாகவிருக்கிறதாம். ஜெயிலர் மூலம் சிவராஜ்குமாரின் மாஸ் மேற்கொண்டு ஏறியிருக்கிறது. எனவே கர்நாடகாவில் லியோவின் வசூல் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி ஆந்திரா மற்றும் தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலஙக்ளிலும் லியோ படம் ரிலீஸ் ஆகும் அன்று அந்தந்த மொழி படங்களும் வெளியாகவிருக்கின்றனவாம். இதனால் லியோ படக்குழு கொஞ்சம் அப்செட் ஆகியிருப்பதாக திரைத்துறை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது





