தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் கதாநாயகியாக தமிழில் நடித்துக்கொண்டிருக்கும் இரண்டு நடிகைகளில் ஒருவர் நயன்தாரா, மற்ற ஒருவர் திரிஷா என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு, அவரை ரசிகர்கள் செல்லமாக குந்தவை என்றே அழைக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் தனுஷ் சூர்யா ஜெயம் ரவி மாதவன் என பலருக்கு ஜோடியாக நடித்தவர் திரிஷா. குறிப்பாக விஜயுடன் கில்லி குருவி ஆதி திருப்பாச்சி லியோ உள்ளிட்ட படங்களில் திரிஷா நடித்திருந்தார். தி கோட் படத்தில் முதன்முறையாக ஐட்டம் பாடல் ஒன்றுக்கு விஜயுடன் குத்தாட்டம் போட்டிருந்தார்.
தமிழ் சினிமாவில் 40 வயதுகளை கடந்து இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் உள்ள சீனியர் நடிகைகளில் திரிஷாவும் ஒருவர். ஆனால் அவர்களில் பலரும் சினிமாவில் அக்கா அம்மா சித்தி அண்ணி அத்தை கேரக்டர்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றனர். ஒரு சிலர் டிவி சீரியல்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றனர்.
ஆனாலும் நடிகை திரிஷா கமல் விஜய் அஜீத்குமார் சிம்பு சிரஞ்சீவி போன்றவர்களுக்கு ஜோடியாக நாயகியாக நடித்துக்கொண்டு வருகிறார். அதுவும் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு நடிகை திரிஷாவின் மார்க்கெட் எகிறி விட்டது. இந்த ஆண்டில் விடாமுயற்சி குட் பேட் அக்லி ஐடென்டி என்ற 3 படங்கள் திரிஷா நடிப்பில் வெளிவந்து விட்டன.
அடுத்ததாக கமல் சிம்புவுடன் நடித்த தக்லைஃப் சிரஞ்சீவியுடன் நடித்த விஸ்வம்பரா மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான வேட்டை கருப்பு படத்திலும் திரிஷாவே நடித்திருப்பதால் அந்த படங்களும் இந்த ஆண்டிலேயே அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை திரிஷா கூறுகையில், எனக்கு எந்த ஹீரோவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை என்று கேட்டால், சந்தேகமே வேண்டாம். எனக்கு பகத் பாசிலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. அவர் எந்த மாதிரியான கதைகளில் நடித்தாலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துவார் என்று நடிகை திரிஷா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





