- Advertisement -
Homeபொழுதுபோக்குராம்குமார் மகன் வாங்கிய கடன் விவகாரத்தில் சிவாஜியின் அன்னை இல்லம் யாருக்கு சொந்தம்? - பரபரப்பு...

ராம்குமார் மகன் வாங்கிய கடன் விவகாரத்தில் சிவாஜியின் அன்னை இல்லம் யாருக்கு சொந்தம்? – பரபரப்பு தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்!

- Advertisement -

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் மற்றும் நடிகர் ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் சினிமா தயாரிப்பாளராக உள்ளார். தனது ஈசன் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஜெகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தார். நடிகர் விஷ்ணு விஷால் நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஜெகஜால கில்லாடி என்ற இந்த படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் துஷ்யந்த் கடன் வாங்கி இருந்தார். இந்த கடனை அவர் திருப்பி தராத நிலையில் கடன் கொடுத்த தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், அன்னை இல்லம் எனது வீடு இல்லை. தம்பி பிரபுவின் வீடு. எனவே அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார்.

அதேபோல் நடிகர் பிரபுவும் இந்த விவகாரம் குறித்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், எனது தந்தை சிவாஜிகணேசன் உயிருடன் இருக்கும்போதே பல ஆண்டுகளுக்கு முன்பே அன்னை இல்லம் வீட்டை எனக்கு உயில் எழுதி வைத்துவிட்டார். இதற்கு எனது சகோதரரும் சகோதரிகளும் ஒப்புக்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து எனது பெயரில் அன்னை இல்லம் வீடு பத்திரம் பதிவு செய்யப்பட்டது. எனவே அன்னை இல்லத்தின் முழு உரிமை எனக்கு மட்டுமே உள்ளது. என் அண்ணன் வாங்கிய கடனுக்கு நான் பொறுப்பேற்க முடியாது என்றும் பிரபு அதில் கூறியிருந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ராம்குமாரை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

ராம்குமாரும் அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த உரிமையும் இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்யும் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் நடிகர் பிரபுதான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சற்று முன்