- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமா களத்தில் நடிகையாக குதித்த பிரபல இயக்குனரின் மகள்? முதல் படமே அப்பாவின் இயக்கத்தில் நடிக்கிறாரா?...

சினிமா களத்தில் நடிகையாக குதித்த பிரபல இயக்குனரின் மகள்? முதல் படமே அப்பாவின் இயக்கத்தில் நடிக்கிறாரா? வேற லெவல்தான் போங்க!

- Advertisement -

இயக்குனர்கள் கே பாலசந்தர் மற்றும் அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சமுத்திரக்கனி. நடிகராக தன் பயணத்தை சினிமாவில் துவங்கினார். இயக்கனர் சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களை மிரட்டினார். அந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

சுப்ரமணியபுரம் படத்துக்கு பிறகு நாடோடிகள் என்ற படத்தை சமுத்திரக்கனி இயக்கினார். அதற்கு முன்பே நடிகர் விஜயகாந்த் நடித்த நெறஞ்ச மனசு என்ற படத்தையும் அவர் இயக்கியிருந்தார். ஆனால் இந்த படம் வணிக ரீதியாக எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் இந்த படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் பெரிய கவனம் பெற்றது.

- Advertisement -

இயக்குனர் சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக அறிமுகமான சமுத்திரக்கனி, அடுத்து அவர் இயக்கிய நாடோடிகள் படத்தில் இயக்குனர் சசிக்குமாரை ஹீரோவாக நடிக்க வைத்தார். இந்த 2 படங்களுமே மிகப்பெரிய வெற்றிப் படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.

இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் சிறந்த படைப்பாளியாக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் சமுத்திரக்கனி. ஒரு நல்ல சமுதாய அக்கறையுள்ள இயக்குனர் மற்றும் நடிகர் என்பதை அவரது படங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. மேலும் கல்வி மருத்துவம் ஆன்மிகம் சார்ந்த பலவிதமான நலத்திட்ட பணிகளையும் அவர் செய்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சசிகுமார் நடிக்கும் ஒரு படத்தை விரைவில் சமுத்திரக்கனி டைரக்ட் செய்ய இருக்கிறார். இந்த படமும் நாடோடிகள் படம் போல மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிக்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான மை லார்டு படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சசிக்குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க அதற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் சமுத்திரக்கனி ஈடுபட்டு வருகிறார். அதற்கு முன்பாக இப்போது சமுத்திரக்கனி இயக்கி வரும் ஒரு படத்தில் சமுத்திரக்கனியின் மகள் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். பெண்கள் கேரக்டர்களை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் சமுத்திரக்கனியின் மகளும் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 Director Samuthirakani

- Advertisement -

சற்று முன்