- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிப்பு அரக்கன் நடிகர் எஸ்ஜே சூர்யாவுக்கு இப்படி ஒரு கௌரவமா? அசந்து போன ரசிகர்கள் -...

நடிப்பு அரக்கன் நடிகர் எஸ்ஜே சூர்யாவுக்கு இப்படி ஒரு கௌரவமா? அசந்து போன ரசிகர்கள் – இருக்கு ஆனா இல்லே என்று இனி அவர் பேச மாட்டாரா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமாருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை தந்த படம் வாலி. இதில் 2 வேடங்களில் அஜீத்குமார் நடித்திருந்தார். அதிலும் அண்ணன், தம்பி கேரக்டரில் அண்ணன் வில்லனாக நடித்திருப்பார். இந்த படத்தில் நடித்த பிறகுதான் சிம்ரன் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா.

வாலி படம் தந்த அபார வெற்றிக்கு பிறகு விஜய் நடித்த குஷி படத்தை எஸ்ஜே சூர்யா இயக்கினார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்று, விஜய் திரை பயணத்தில் முக்கிய திருப்பத்தை தந்தது. குறிப்பாக ஜோதிகா நடிப்பு அவரது இமேஜை மேலும் பலமடங்கு உயர்த்தியது. வாலி, குஷி என்ற 2 படங்களின் வெற்றியால் இயக்குனர் எஸ்ஜே சூர்யா அதிக கவனம் பெற்றார்.

- Advertisement -

அதன்பிறகு நடிகராக மாறிய எஸ்ஜே சூர்யா கள்வனின் காதலி, அன்பே ஆருயிரே, நியூ, திருமகன், வியாபாரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிறகு திடீரென காணாமல் போன அவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இறைவி படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இசை, ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர், மார்க் ஆண்டனி, மாநாடு, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், இந்தியன் 2, டான், ராயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இப்போது தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்ற புதிய அடைமொழியுடன் வலம் வருகிறார். தொடர்ந்து தமிழில், தெலுங்கில், மலையாளத்திலும் எஸ்ஜே சூர்யா பிஸியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலை கழகத்தில் இன்று நடந்த 15வது பட்டமளிப்பு விழாவில் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்ஜே சூர்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.

கடந்த 25 ஆண்டுகளாக சினிமாத்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் எஸ்ஜே சூர்யாவை பாராட்டி இந்த கவுரவ டாக்டர் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. ஏற்கனவே நடிகர்கள் சிலம்பரசன், ராம்சரண் ஆகியோருக்கு வேல்ஸ் பல்கலை கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. தற்போது எஸ்ஜே சூர்யாவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு படத்தில் அவர் இருக்கு, ஆனா இல்லே என்று மனநலம் பாதித்த கேரக்டரில் பேசுவார், இப்போது டாக்டராகி விட்டதால் இனி அப்படி பேச மாட்டார் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்