- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை, அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், இறைவனை பிரார்த்திப்பதாக விஜய் பதிவு

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை, அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், இறைவனை பிரார்த்திப்பதாக விஜய் பதிவு

- Advertisement -

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். ஜெயிலர் வெற்றிக்கு பிறகு, வேட்டையன் படத்தில் நடித்து முடித்த அவர், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். வரும் 10ம் தேதி வேட்டையன் படம் ரிலீஸ் ஆகிறது. இதற்கிடையே கூலி படத்துக்காக விசாகப்பட்டிணத்தில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன் கலந்து கொண்டார்.

இந்நிலையில் நேற்றிரவு திடீரென ரஜினியின் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் காலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியு சிகிச்சை பிரிவில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ரத்த நாளம் வீக்கம் சம்பந்தமான சிகிச்சை நடந்ததாக தகவல்கள் பரவியது.

- Advertisement -

ஆனால் மருத்துவமனை நிர்வாக தரப்பிலிருந்து எந்தவிதமான அதிகாரபூர்வ விளக்கமும் வரவில்லை. எனினும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர், நடிகர் ரஜினிகாந்த் விரைவில் உடல் நலம் பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று தங்களது வலைதள பக்கங்களில் பதிவிட்டனர். ரஜினி ரசிகர்களும் விரைவில் ரஜினி குணமடைய வேண்டுவதாக பதிவுகளை செய்தனர்.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, நடிகர் ரஜினிகாந்தின் இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வீக்கம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது. வீக்கத்திற்கான சிகிச்சைக்கு ஸ்டண்ட் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இது ரசிகர்கள் மத்தியிலும், தமிழ் சினிமா துறையினர் மத்தியிலும் ஒருவித நிம்மதியை, மகிழ்ச்சியை தந்துள்ளது. ரஜினிக்கு 73 வயதாகி உள்ள நிலையில் அவரை இயக்குனர்கள் மிகவும் சிரமப்படுத்தாமல், எளிதாக காட்சிகளை வைத்து படம் இயக்க வேண்டும் என்றும், லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் சிரமப்பட்டு நடித்ததால்தான் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதாக வலைப்பேச்சு அந்தணன் கூறியதும் வைரலானது.

இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் தலைவரும் நடிகருமான விஜய், நடிகர் ரஜினிகாந்த் உடல் நலமடைய பிரார்த்திப்பதாக, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார் அந்த பதிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் ரஜினிகாந்த், விரைவில் பூரண உடல் நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமாற இறைவனை வேண்டுகிறேன் என்று நடிகர் விஜய் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்