- Advertisement -
Homeபொழுதுபோக்குவருகிற ஏப்ரல் 10ம் தேதி இட்லிகடை ரிலீஸ் இல்லை; குபேரா படமும் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு...

வருகிற ஏப்ரல் 10ம் தேதி இட்லிகடை ரிலீஸ் இல்லை; குபேரா படமும் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு – என்னப்பா ஆச்சு என விரக்தியடைந்த தனுஷ் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்தாண்டில் வெளியாகி சக்கைப் போடு போட்ட படம் ராயன். இது அவரது 50வது படமாக இருந்தது. இந்த படத்தை தனுஷ் டைரக்ட் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்த வெற்றிப் படமாகவும் இருந்தது. இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசை பெரிய பலமாக இருந்தது. அதனால் தொடர்ந்து படங்களை இயக்க தனுஷ் ஆர்வம் காட்டினார்.

தனது அக்கா மகன் பவிஷ் என்பவரை நாயகனாக அறிமுகப்படுத்தி தனுஷ் இயக்கிய படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படம் நீக் என சுருக்கமாக அழைக்கப்பட்ட நிலையில், கடந்த 21ம் தேதி ரிலீஸானது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை உற்சாகப்படுத்தவில்லை. அதே நாளில் வெளியான பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம்தான் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழலில் வருகிற ஏப்ரல் 10ம் தேதி இட்லி கடை ரிலீஸ் என்ற அறிவிப்பை பல மாதங்களுக்கு முன்பே நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷ் அறிவித்து இருந்தார். இந்த படத்தில் தனுஷூடன் ராஜ்கிரண் சத்யராஜ் நித்யா மேனன் ஷாலினி பாண்டே அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.

டான் பிக்சர்ஸ் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் என 3 நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. இந்த படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என்பது இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதே நாளில் அஜீத்குமார் நடிப்பில் குட் பேட் அக்லி படம் வெளியாக உள்ளதால், இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் உரிமம் பெற்ற நெட்பிளிக்ஸ் தரும் நெருக்கடியே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

- Advertisement -

அதனால் இட்லி கடை படம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம்தான் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மதராஸி படமும் வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் ஒரு தகவல் உள்ளதால், தனுஷ் சிவகார்த்திகேயன் படங்கள் மோதிக் கொள்ளவும் வாய்ப்புள்ளது.

இதற்கிடையே தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ராஷ்மிகா மந்தனா நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடித்த படம் குபேரா. இந்த படம் பிப்ரவரி மாதமே ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்பட்ட நிலையில் வருகிற ஜூன் 20ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி தனுஷ் நடித்த 2 படங்கள் ரிலீஸ் தேதி பல மாதங்களுக்கு தள்ளிப் போவது அவரது ரசிகர்களை விரக்தியடைய செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்