- Advertisement -
Homeபொழுதுபோக்குமலையாள நடிகையிடம் தயாரிப்பாளரை வம்பில் மாட்டிவிட்ட நடிகை நயன்தாரா - என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா…?

மலையாள நடிகையிடம் தயாரிப்பாளரை வம்பில் மாட்டிவிட்ட நடிகை நயன்தாரா – என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா…?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் பிஎல் தேனப்பன். பேரன்பு, அய்யனார், துரை, வல்லவன், பிரியசகி, கனா கண்டேன், திவான், பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், காதலா காதலா உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருக்கிறார். இதில் சில படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக இருந்துள்ளன.

சினிமா தயாரிப்பாளராக மட்டுமின்றி இவர் பல படங்களில் நடித்தும் இருக்கிறார். குறிப்பாக மகாராஜா, குரங்கு பொம்மை, முத்து, போர்த்தொழில் உள்ளிட்ட படங்களில் சில காட்சிகளில் பிஎல் தேனப்பன் நடித்துள்ளார். தயாரிப்பு நிர்வாகியாக நட்புக்காக, தொடரும், பிஸ்தா, பாரதி கண்ணம்மா, அவ்வை சண்முகி, பெரிய குடும்பம், தேவர் மகன், நாட்டாமை என பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.

- Advertisement -

சக்திவேல், குணா, ராஜா ராஜாதான், தென்பாண்டி சீமையிலே, பூவே இளம்பூவே போன்ற படங்களில் புரடக்சன் மேனேஜராகவும் பிஎல் தேனப்பன் பணிபுரிந்தவர் என்பதால், தமிழ் சினிமாவில் முக்கிய ஒரு பிரபலமாக இவர் இருக்கிறார். மேலும் இவர் பிரெஞ்சு மொழியில் 2 குறும்படங்களை தயாரித்துள்ளார்.

இந்த 2 குறும்படங்களும் பிரான்சில் பெருமைக்குரிய கேன்ஸ் திரைப்பட விழாவில், திரையிடப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிகராக, தயாரிப்பாளராக வலம் வரும் பிஎல் தேனப்பன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துக்கொண்டு, அவரது தயாரிப்பில் வெளிவந்த படங்களின் வெற்றி, தோல்விகள் குறித்து வெளிப்படையாக பேசினார்.

- Advertisement -

என்னுடைய தயாரிப்பில் வந்த பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. சில படங்கள் நல்ல படங்களாக இருந்தும் பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் நஷ்டத்தை தந்துள்ளன. எனினும் பிரியசகி, கனா கண்டேன் போன்ற படங்களை டிவியில் பார்க்கும் ரசிகர்கள் பலரும், என்னை அழைத்து பாராட்டவே செய்கின்றனர்.

நடிகர் சிம்பு, நயன்தாரா என்னிடம் அடிக்கடி கலாட்டா செய்வார்கள். ஒருமுறை, நடிகை நயன்தாரா என் செல்போனை கேட்டு வாங்கினார். பிறகு நடிகை கோபிகாவுக்கு ஐ லவ் யூ என மேசேஜ் அனுப்பி விட்டு அதை டெலீட் செய்துவிட்டார். அடுத்த நாள் கோபிகாவுக்கு நான் போன் செய்தால், என்ன சார் இப்படி எல்லாம் மெசேஜ் பண்ணியிருக்கீங்க, என்று கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் நேற்றிரவு சிம்புவும் நயன்தாராவும் என் செல்போனை வைத்திருந்தனர். அவர்கள் பார்த்த வேலை இது என்று கோபிகாவுக்கு புரிய வைத்து ஸாரி சொன்னேன், என்று அந்த நேர்காணலில் தேனப்பன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்