- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதுதான் - ஆனா...

நடிகர் தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதுதான் – ஆனா இது அந்த ஊர்ல தானே நடந்திருக்கணும்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜா நிகரற்றவராக மதிக்கப்படுகிறார். 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இசை சக்கரவர்த்தியாக கோலோச்சி வரும் இளையராஜாவை தவிர்த்துவிட்டு பார்த்தால், தமிழ் சினிமா இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைந்திருக்குமா என்பதே சந்தேகம்தான். தனிப்பட்ட மனிதராக பல விமர்சனங்களுக்கு இளையராஜா ஆளானாலும், இசைத்துறையில் அவரது பணி என்பது, பாராட்டுகளுக்கு அப்பாற்பட்டது. பல மகத்தான பெருமைகளை கொண்டது.

நடிகர் தனுஷ் இப்போது, தனது 50வது படமான ராயன் படத்தை டைரக்ட் செய்து, அதில் நடிக்கிறார். அத்துடன் தன் அக்கா மகன் நடிக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்து விட்டதாக தெரிகிறது. மேலும் சேகர் கம்முலு இயக்கத்தில் குபேரா படத்தில் நடிகர் தனுஷ் இப்போது நடித்து வருகிறார்.

- Advertisement -

இவ்வளவு பிஸியான ஷெட்யூலிலும் நடிகர் தனுஷ், அடுத்ததாக இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன்தான், இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தை டைரக்ட் செய்கிறார் என்பதும், அவரை சிபாரிசு செய்தும் இருக்கிறார்.

இளையராஜா கேரக்டரில் நடிகர் தனுஷ் நடிக்கும் இந்த படத்தில் தனுஷ் சம்பளம் மட்டும் ரூ.50 கோடி என்று கூறப்படுகிறது. இளையராஜா போன்ற உருவத் தோற்றம் கொண்டவர் அவரது மகன் கார்த்திக் ராஜா என்றாலும், அவர் நாயகனாக நடித்தால் படம் ஓடுமா என்ற கோணத்தில் சிந்தித்து, பிரபல நடிகர் நடித்தால் தான் படம் வெயிட்டாக இருக்கும் என, தனுஷை இந்த படத்தில் நடிக்க வைக்கின்றனர்.

- Advertisement -

படத்தின் டைரக்டர் அருண் மாதேஸ்வரனை கடந்த ஒரு மாதமாக தன்னுடன் தங்க வைத்துள்ள இளையராஜா, அவ்வப்போது தனது வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை சொல்ல சொல்ல அதை அப்படியே ஸ்கிரிப்ட் வடிவில் திரைக்கதையாக அருண் மாதேஸ்வரன் உருவாக்கி வருகிறார். அவரது நீண்ட கால வரலாற்றை ஒரு படமாக சொல்ல முடியுமா அல்லது 2 பாகங்களாக இந்த படம் எடுக்கப்படுகிறதா என்பது இன்னும் முடிவாகவில்லை.

இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஆக நாளை, இளையராஜா படத்தின் துவக்க விழா பூஜை சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்கிறது. இதில் இளையராஜா, தனுஷ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். படத்துவக்க விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்களும் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால் இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தின் துவக்க விழாவை, அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில்தானே துவங்கியிருக்க வேண்டும் என, ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்