- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனிமே இப்படி பண்ணுவியா? ஓவர் டென்ஷனில் யுவன் சங்கர் ராஜாவை ஓங்கி அறைந்த இசைஞானி இளையராஜா...

இனிமே இப்படி பண்ணுவியா? ஓவர் டென்ஷனில் யுவன் சங்கர் ராஜாவை ஓங்கி அறைந்த இசைஞானி இளையராஜா – அவரே சொன்னதுதாங்க இது!

- Advertisement -

இசைஞானி இளையராஜா கடந்த 48 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இசை ராஜ்ஜியம் நடத்திவரும் இசை சக்ரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் லண்டனில் வேலியன்ட் சிம்பொனி இமைத்து உலக நாடுகளில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்து திரும்பியிருக்கிறார். அவருக்கு மிக விரைவில் தமிழக அரசு பாராட்டு விழா, அரசு விழாவாக நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இசைஞானியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா எப்போதுமே வெளிப்படையாக பேசக்கூடியவர். தனது இயல்பு எப்படியோ அவரது பேச்சும் அப்படிதான் இருக்கிறது. அதனால் அவர் கடும் விமர்சனங்களுக்கு அவ்வப்போது ஆளாகிறார். குறிப்பாக அவர் இசையமைத்த பாடல்களுக்கு அவருக்கு மட்டுமே உரிமை உள்ளது என்ற நிலையில், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

- Advertisement -

காலத்தால் அழிக்க முடியாத அவரது இசை பாடல்களை பாடல்களை மற்ற படங்களில் பயன்படுத்தினால் அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்கிறார். தனது அனுமதியின்றி தான் இசையமைத்த பாடல்களை இசையை பயன்படுத்தியதற்காக கோடிக்கணக்கில் நஷ்ட ஈடும் கேட்டு பிரச்னை செய்து வருகிறார்.

அதே நேரத்தில் இசையமைப்பாளர் தேவா, என்னுடைய பாடல்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளுங்கள், அது எனக்கு மகிழ்ச்சிதான் என்றும் அறிவித்திருக்கிறார். இளையராஜா போலவே ஒரு காலகட்டத்தில் இசையில் கொடி கட்டிப் பறந்தவர்தான் இசையமைப்பாளர் தேவா. இவருக்கு தேனிசை தென்றல் என்ற பட்டப் பெயரும் உண்டு.

- Advertisement -

இளையராஜா போலவே, அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இசையில் கொடி கட்டிப் பறந்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற யுவன் சங்கர் ராஜாவிடம் அப்பாவிடம் எப்போதாவது திட்டு அல்லது அடி வாங்கி இருக்கிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த யுவன் சங்கர் ராஜா கூறியதாவது, சின்ன வயதில் ஒருமுறை பெசண்ட் நகர் பீச்சுக்கு அப்பா காரில் அழைத்து போவதாக சொன்னார். நானும் காரில் ஏறி அமர்ந்து விட்டேன்.

அப்பா வெளியே கிளம்பி வரும்போது தயாரிப்பாளர் ஒருவர் அப்பாவை பார்க்க வந்துவிட்டார். வீட்டுக்குள் அப்பாவிடம் அவர் பேசிக்கொண்டே இருந்ததால் ரொம்பவும் நேரமாகி விட்டது, அதனால் நான் பொறுமை இழந்து கார் ஹாரனை அடிக்கடி அடித்துக்கொண்டே இருந்தேன். இதைக் கேட்டு டென்சன் ஆன அப்பா ஓடி வந்து, உள்ளே பேசிக்கிட்டு இருக்கோம், அமைதியாக இருக்க மாட்டியா, இனிமே இப்படி பண்ணுவியா என ஓங்கி அறைந்தார். அதன்பிறகு சைலண்ட் ஆகி விட்டேன், என்று யுவன் சங்கர் ராஜா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்