- Advertisement -
Homeபொழுதுபோக்குஅண்ணன் என்ன தம்பி என்ன, சொந்தம் என்ன பந்தம் என்ன, அன்று பாடியதை இன்று நிரூபித்து...

அண்ணன் என்ன தம்பி என்ன, சொந்தம் என்ன பந்தம் என்ன, அன்று பாடியதை இன்று நிரூபித்து காட்டிய இளையராஜா – கங்கை அமரன் சகோதரர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சகோதரர்களாக இருப்பவர்கள் இளையராஜா, கங்கை அமரன். இரண்டு பேருமே இசையமைப்பாளர்கள்தான். கங்கை அமரன் கூடுதலாக கரகாட்டக்காரன் போன்ற சில படங்களை டைரக்ட் செய்தும் இருக்கிறார். இளையராஜா போலவே, கங்கை அமரனுக்கும் சங்கீத ஞானம் உண்டு. பல ஹிட் பாடல்களை அவரும் தந்திருக்கிறார்.

எனினும் சென்னைக்கு இருவரும் இசைவாய்ப்பு கேட்டு வந்த புதிதில், அண்ணன் இளையராஜாவுக்கு நிழலாக இருந்து, அவருக்கு ஒரு உதவியாளர் போல செயல்பட்டவர் கங்கை அமரன். இளையராஜாவின் ஆரம்ப கால வளர்ச்சியில் கங்கை அமரனின் பங்கு மிகப்பெரியது.

ஆனால், மற்றவர்களை ஒரே நொடியில் உதாசீனப்படுத்தி வெளியேற்றுவதில் வல்லமை மிக்க இளையராஜா, ஒரு கட்டத்தில் தனது சொந்த சகோதரன் கங்கை அமரனையும் வெறுத்து ஒதுக்கி விட்டார். இளையராஜாவின் மனைவி ஜீவா மறைவுக்கு வந்த கங்கை அமரனை பார்க்க விடாமல் தடுத்தவர் இளையராஜா.

அதே போல், பவதாரணி மறைவின் போது வந்தால் எங்கே தன்னை அவமானம் செய்துவிடுவாரோ என்று அச்சப்பட்டுதான், கங்கை அமரன் பவதாரணி மறைவுக்கு நேரில் வராமல், வீட்டிலேயே இருந்து அழுதுகொண்டு இருந்தார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் பலரும் கூறினர். அந்தளவுக்கு தன் சகோதரனிடம் கல் நெஞ்சத்துடன் நடந்துக்கொள்பவர் இளையராஜா.

இந்நிலையில், கங்கை அமரனின் 2வது மகன், இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி திருமணம் நேற்று திருத்தணியில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், சென்னை 28 படக்குழு சார்ந்த அவரது நெருங்கிய நண்பர்கள் பங்கேற்றனர். அதற்கு முன்பாக ப்ரீ வெட்டிங் டே நிகழ்ச்சி நடந்தது. இதில் இளையராஜா மூத்த மகன் கார்த்திக் ராஜா மட்டுமே பங்கேற்றார்.

ஆனால் திருமண விழாவில் கங்கை அமரனின் சகோதரர், பிரேம்ஜியின் சொந்த பெரியப்பா இளையராஜா பங்கேற்கவில்லை. ஒரு வகையில், குடும்பத்தில் மூத்தவராக இளையராஜா தலைமையில்தான் இந்த திருமண விழா நடைபெற்றிருக்க வேண்டும். அதே போல் இளையராஜா இளைய மகன், பிரேம்ஜியின் சகோதரர் யுவன் ஷங்கர் ராஜாவும் வரவில்லை. இதுவும் பலருக்கு ஆச்சரியத்தை தந்தது. 1991ல் வெளியான தர்மதுரை படத்தில் இடம்பெற்ற அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன என்ற இளையராஜா இசையமைத்த பாடலை தன் சொந்த வாழ்க்கையிலும் நிரூபித்துவிட்டார் என்கின்றனர் ரசிகர்கள்.

சற்று முன்