- Advertisement -
நடிகர் தனுஷ் ஹீரோவாகவும் நடிகர் மம்முட்டி வில்லனாகவும் நடித்துள்ள ஓம் படம் நாளை மறுநாள் 20ம் தேதி வெளியாக உள்ளது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சாமி இயக்கத்தில் அமரன் படத்தை தொடர்ந்து ஓம் படத்தில் நடிகை சாய்பல்லவி நடித்துள்ளார். இதில் போலீஸ் உயரதிகாரியாக நடித்துள்ள சாய்பல்லவி ஹேர் கட்டிங் செய்து பாப் ஹேர் ஸ்டைலில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் தெலுங்கு மொழி பேசும் ஆந்திரா பெண்ணாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ்நாடு, ஆந்திரா கதைக்களத்தில் உருவானது என்பதால் 30 சதவீதம் படத்தில் தெலுங்கு மொழி வருகிறது. குறிப்பாக நடிகை சாய்பல்லவி தெலுங்கு மொழியில் பேசுவதால் தமிழில் திரையில் வசனங்கள் வரும் என்றும் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





