- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி துப்பு இல்லாம பேசலாமா குப்புசாமி? நீங்க தமிழ் அறிஞர் என்று மத்தவங்க தான் சொல்லணும்...

இப்படி துப்பு இல்லாம பேசலாமா குப்புசாமி? நீங்க தமிழ் அறிஞர் என்று மத்தவங்க தான் சொல்லணும் – புஷ்பவனம் குப்புசாமிக்கு பாஜக கண்டனம்!

- Advertisement -

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது, முதல்வருக்கு அரோகரா கோஷம் போட்டது தவறு என்று பாடகர் வேல்முருகன் மன்னிப்பு கேட்டுவிட்டார். அவர் கொடுத்த விளக்கம் சரி. ஆனால் பெரிய தமிழ் அறிஞர் போல புஷ்பவனம் குப்புசாமி விளக்கம் தந்திருக்கிறார். கமா போட்டிருக்கேன் புல்ஸ்டாப் வைத்திருக்கிறேன் என்கிறார். நீயே தப்பு பண்ணியிருக்கே? ஏதோ தெரியாம பண்ணிட்டேன் மாதிரி வேல்முருகன் மாதிரி சொல்ல வேண்டியதுதானே? இவரே நான் தமிழ் அறிஞர் என்கிறார். அதை மத்தவங்க தான் சொல்லணும். இது தப்பு. குப்புசாமி இனிமேல் துப்பு இல்லாமல் பேசக்கூடாது என்று குப்புசாமிக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்