- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்ய இப்படி பார்க்கணும்னு எத்தனை நாளா அவரது ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள் தெரியுமா... கடைசியில வெங்கட் பிரபு...

விஜய்ய இப்படி பார்க்கணும்னு எத்தனை நாளா அவரது ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள் தெரியுமா… கடைசியில வெங்கட் பிரபு படத்துலதான் நடக்குது போல…

- Advertisement -

சமீபத்தில் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் முதல் பாதி நன்றாக இருந்ததாகவும், இரண்டாம் பாதி அந்த அளவுக்கு சரியில்லை என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் அது எல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் லியோவின் வசூல் அமைந்தது. கிட்டத்தட்ட ஒரே வாரத்தில் அந்த திரைப்படம் 460 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனமே அறிவித்தது.

இதைத்தொடர்ந்து லியோ திரைப்படத்தின் வெற்றி விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிகப்பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. இதில் தளபதி விஜய் உடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை திரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது 68வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விஜய். அஜித்தை வைத்து மங்காத்தா என்னும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த வெங்கட் பிரபு தான் இந்த படத்தின் இயக்குனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். இதுபோக பிரபுதேவா, பிரசாந்த், லைலா, இவானா, மைக் மோகன், வைபவ், பிரேம்ஜி அமரன், அஜ்மல், யுகேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர். டைம் ட்ராவல் முறையில் இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் படத்தில் விஜய்க்கு தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களாம். இதன் சூட்டிங் முதலில் டெல்லியில் தொடங்கியது. பிறகு தாய்லாந்து நாட்டில் முக்கியமான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. அடுத்ததாக துருக்கியில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்போது சூட்டிக்கிற்காக ஹைதராபாத்திற்கு வெங்கட் பிரபு பட குழு சென்றுள்ளது.

இந்த படத்தின் டைட்டிலை ஜனவரி 1ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் மைக் மோகன் வில்லனாக நடிப்பது, ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் விஜய்யை மிகவும் இளமையான தோற்றத்தில் காண்பிக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம். சுமார் பத்து நிமிடங்கள் அவர் இந்த தோற்றத்தில் வருவார் என்று கூறப்படுகிறது. 2000 ஆண்டுகளில் குஷி ஷாஜகான் படத்தில் பார்த்த விஜய்யை நிச்சயமாக இதில் மீண்டும் பார்க்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த தகவல் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்