- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமா ஷூட்டிங்கில் இயக்குனருடன் வாக்குவாதம், எம்ஜிஆர் கொடுத்த அனுமதி, வசமாக சிக்கிக்கொண்ட நடிகை லதா -...

சினிமா ஷூட்டிங்கில் இயக்குனருடன் வாக்குவாதம், எம்ஜிஆர் கொடுத்த அனுமதி, வசமாக சிக்கிக்கொண்ட நடிகை லதா – அப்படி என்னதான் நடந்தது?

- Advertisement -

புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்தவர் லதா. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை லதா கூறியதாவது, உரிமைக்குரல் படத்தில் நான் நடித்துக்கொண்டு இருந்தேன். 10 நாட்கள் ஷூட்டிங் நடந்துவிட்டது. இன்னும் 2 நாட்கள் கூடுதலானது. அப்போது திருப்பதி செல்ல நான் திட்டமிட்டு இருந்ததால், நாளைக்கு நான் ஷூட்டிங் வர மாட்டேன் என்று படத்தின் இயக்குனர் ஸ்ரீதரிடம் சொல்லி விட்டேன்.

ஆனால் அவர் சம்மதிக்கவில்லை. நானும் டைரக்டரும் 5 நிமிடங்களுக்கு மேல் அதுகுறித்து விவாதம் செய்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அங்கு இருந்த எம்ஜிஆர் இதை கவனித்து விட்டார். என்னை அருகில் அழைத்து விசாரித்தார். விவரத்தை சொன்னேன். 2 நிமிடங்கள் மட்டுமே யோசித்த அவர், திருப்பதிக்கு போய்விட்டு நாளை மதியம் வந்துவிடுங்கள் என்று அனுமதி தந்துவிட்டார்.

- Advertisement -

நாளைக்கு மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை ஷூட்டிங் வைத்துக்கொள்ளலாம் என்று கூறிய எம்ஜிஆர் டைரக்டரிடமும் அப்படியே ஏற்பாடுகளை செய்யுமாறு கூறிவிட்டார். நானும் அம்மாவும் மறுநாள் காலை 5 மணிக்கே திருப்பதிக்கு கிளம்பி சென்றுவிட்டோம். ஆனால் திரும்பி வரும்போது பாதி வழியில் கார் ரிப்பேராகி விட்டது. அப்போது போன் வசதி இல்லை. யாரிடமும் தகவல் சொல்ல முடியவில்லை.

கார் ரெடியாகி வீட்டுக்கு வர மாலை 5 மணி ஆகிவிட்டது. எம்ஜிஆரிடம் வசமாக சிக்கிக் கொண்டோம் என்ற பயத்துடன் வீட்டுக்கு வந்தோம். ஷூட்டிங்கும் கேன்சலாகி விட்டது. வீட்டுக்கு வந்தால் எம்ஜிஆர் கார் முன்னால் நிற்கிறது. வீட்டுக்குள் என் தங்கை உள்ளிட்ட குழந்தைகளுக்கு எம்ஜிஆர் உணவு பரிமாறிக்கொண்டு இருக்கிறார், பார்த்தவுடன் அப்படியே நெகிழ்ந்து போய்விட்டேன்.

- Advertisement -

ஏன் பயப்படறே வா என்று என்னையும் சாப்பிட அழைத்தார். ராமாவரம் தோட்டத்தில் இருந்து சாப்பாடு வரவழைத்து அனைவருக்கும் அதை பரிமாறி கொண்டிருக்கிறார். என்னையும் அம்மாவையும் சாப்பிட வாங்க என்று அழைத்த அவரிடம், ஸாரிங்க, வர்ற வழியில் கார் ரிப்பேராகி லேட் ஆகிவிட்டது என்றேன்.

அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். டைரக்டர் கிட்ட நாளைக்கு ஷூட்டிங் வைக்கச் சொல்லிட்டேன். பசியோடு இருப்பீங்க, முதலில் வந்து சாப்பிடுங்க என அழைத்தார். அதுதான் அவரது மனிதநேயம். ஒரே ஒரு சூரியன் ஒரே ஒரு சந்திரன் அதுபோல் ஒரே ஒரு எம்ஜிஆர் என்று நடிகை லதா பேசியிருக்கிறார். நடிகை லதா எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக உரிமைக்குரல் படத்தில் இருவரும் இணைந்து நடித்தது பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பெரிய வெற்றிப்படமாகவும் இருந்தது.

- Advertisement -

சற்று முன்