- Advertisement -
Homeபொழுதுபோக்குகடந்து வந்த பாதையை கண்முன்னே எடுத்துக் கூறிய சூரி, விஜய் சேதுபதி... ஆச்சரியப்பட்டு கேட்ட இயக்குனர்...

கடந்து வந்த பாதையை கண்முன்னே எடுத்துக் கூறிய சூரி, விஜய் சேதுபதி… ஆச்சரியப்பட்டு கேட்ட இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்… எதிர்நீச்சல் போட ஊக்குவிக்கும் கதை…

- Advertisement -

தமிழ் சினிமாவில் விளிம்பு நிலையில் இருந்து முன்னுக்கு வந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். இவர்களில் குறிப்பாக நாம் அடிக்கடி கூறி வருவது சிவகார்த்திகேயனை தான். ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அவர் இருந்தார். தனக்கே உண்டான, நையாண்டியுடன் அவர் நிகழ்ச்சியை நடத்த அது பலருக்கும் பிடித்துப் போனது.

 

அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய சிவகார்த்திகேயன் பிறகு வெள்ளி திரைக்கு வந்து சாதித்தார். தற்போது தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவரைப் போலவே தான் விஜய் சேதுபதியும், ஆரம்ப காலகட்டத்தில் வெற்றிக்காக போராடினார்.

 

வாய்ப்பு கிடைத்த திரைப்படங்களில் எல்லாம் சிறு சிறு கதாபாத்திரங்களில் அவர் நடித்தார். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் அவர் வந்திருப்பார். இதே போல் புதுப்பேட்டை திரைப்படத்திலும், நாம் விஜய் சேதுபதியை பார்த்திருப்போம். பிறகு சுந்தரபாண்டியன் என கிடைத்த திரைப்படங்களில் எல்லாம் நடித்த விஜய் சேதுபதிக்கு பீட்சா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது.

 

அங்கிருந்து வளர ஆரம்பித்த நடிகர் தனது 50-வது திரைப்படத்தில், உலகம் போற்றும் வெற்றியை கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். ஆமாம் மகாராஜா திரைப்படம் இந்தியா மட்டுமல்லாமல் சீனாவிலும் சக்கை போடு போட்டு வருகிறது. இவர் ஆரம்பத்தில் நடித்த வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில், நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூரி.

 

அதற்கு முன் அவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், எதிலும் அவர் முகம் கூட பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் வெண்ணிலா கபடி குழு அப்படி அல்ல. ஒரே ஒரு பரோட்டா நகைச்சுவை காட்சி அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் திருப்பி போட்டது. தற்போது காமெடியன் என்பதைக் கடந்து நடிகராக அவர் உயர்த்திருக்கிறார். இவர்கள் இருவரும் நடித்திருக்கும், விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகம் வரும் 20ஆம் தேதி வெளியாகிறது.

 

இந்த நிலையில் பேட்டி ஒன்றில், இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரும் பங்கேற்க அதில் பல நினைவுகளை சூரி மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நினைவு கூர்ந்தனர். அப்போது கே எஸ் ரவிக்குமாரிடம் பேசிய சூரி, நான் உங்களின் படையப்பா திரைப்படத்தில் பணி புரிந்திருக்கிறேன். அதில் நான் எலக்ட்ரீசியன் ஆக இருந்தேன். வரலாறு திரைப்படத்தில் வாய்ப்பு கேட்பதற்காக இருந்த நீண்ட வரிசையில் நானும் காத்திருந்தேன் என்று கூறினார். இதைக் கேட்டு கே எஸ் ரவிக்குமார் ஆச்சரியப்பட்டார். பிறகு பேசிய விஜய் சேதுபதி, வரலாறு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போது அருகில் தான் புதுப்பேட்டை சூட்டிங் நடைபெற்றது. அப்போது உங்களைப் பார்ப்பதற்காக அங்கு வந்திருக்கிறேன் ஆனால் அது நடக்கவில்லை என்று பேசினார். இவர்களது இந்த பேட்டியும் தற்போது அவர்கள் வளர்ந்திருக்கும் உயரமும் பலருக்கும் உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.

சற்று முன்