- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் நடித்த கூலி படம் ரிலீஸ் எப்போது? சுடச்சுட வந்த லேட்டஸ்ட் தகவல் இதுதான் -...

ரஜினிகாந்த் நடித்த கூலி படம் ரிலீஸ் எப்போது? சுடச்சுட வந்த லேட்டஸ்ட் தகவல் இதுதான் – அப்போ அதே மாதிரி ஹிட் கொடுக்குமா?

- Advertisement -

கடந்தாண்டில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் வெளியானது. தசெ ஞானவேல் இயக்கத்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்த் நடித்த இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் தயாரித்திருந்தது. உலகளவில் 265 கோடி ரூபாய் வசூலித்த இந்த படம் வணிக ரீதியாக வெற்றிப் படம்தான்.

ஆனால் அதே நேரத்தில் விமர்சன ரீதியாக பெரும்பாலானவர்களுக்கு இந்த படம் திருப்தியளிக்கவில்லை. அமிதாப் பச்சன் மஞ்சு வாரியார் துஷாரா விஜயன் ரோகிணி அபிராமி ராணா டகுபதி பகத் பாசில் ரமேஷ் ராவ் என பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். எனினும் கதை, திரைக்கதை 1980களில் வெளியான படம் போல இருந்ததாக ரசிகர்கள் விமர்சித்தனர்.

- Advertisement -

இப்போது நடிகர் ரஜினிகாந்த் தனது 171வது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கான ரஜினிகாந்த் தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சத்யராஜ் உபேந்திரா ஸ்ருதிஹாசன் நாகர்ஜூனா அமீர்கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாங்காங் ஜெய்பூர் விசாகப்பட்டனம் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

- Advertisement -

கூலி படம் ரிலீஸ் எப்போது என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது. ஏனெனில் ஜெயிலர் 2 படம் 13 மாதங்கள் உருவாக கால அவகாசம் தேவைப்படும் என்று இயக்குனர் நெல்சன் ஏற்கனவே கூறி விட்டதால், அந்த படம் 2026ம் ஆண்டில்தான் வெளியாகும் என்பது தெளிவாகி விட்டது. அதனால் இந்த ஆண்டில் கூலி படம் மட்டுமே ரஜினி நடிப்பில் வெளியாகிறது.

இந்நிலையில் கூலி படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏனெனில் கடந்த 2023ம் ஆண்டில் ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம்தான் வெளியானது. அந்த படம் மாஸ் ஹிட் கொடுத்ததால் அந்த சென்டிமென்ட் காரணமாக, கூலி படத்தையும் ஆகஸ்ட் மாதமே ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்