- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற 10 நாட்களில் இப்படியும் ஒரு தரமான சம்பவமா? - காலரை...

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற 10 நாட்களில் இப்படியும் ஒரு தரமான சம்பவமா? – காலரை தூக்கி விட்டுக் கொள்ளும் தவெக கட்சியினர்!

- Advertisement -

காட்டு மொக்கை என்று விமர்சிக்கப்படும் சில படங்கள் கூட சில நேரங்களில் மிகப்பெரிய வசூலை குவித்து விடுகின்றன. அதற்கு காரணம் ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பும் ஆதரவும்தான். ரஜினி விஜய் அஜீத்குமார் நடித்த சில சுமாரான படங்கள் கூட அப்படிதான் வசூலை அள்ளி விடுகின்றன.

அந்த வகையில் நடிகர் விஜய் நடித்த சுறா குருவி ஆதி வாரிசு பீஸ்ட் லியோ தி கோட் போன்ற சில படங்கள் வணிக ரீதியாக மிகப்பெரிய லாபத்தை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி நடிகர் விஜய் நடித்த படத்தின் பஃர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் டிரெய்லர் டீசர் பஃர்ஸ்ட் சிங்கிள் செகண்ட் சிங்கிள் என எது வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்புதான்.

- Advertisement -

அடுத்த சில மணி நேரங்களில் அது பல மில்லியன்களை கடந்து சாதனை செய்து விடுவது வழக்கமாக தமிழ் சினிமாவில் நடந்து வந்தது. இப்போது தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகும் அந்த சாதனை சமூக வலைதளங்களில் சத்தமின்றி தொடர்ந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வந்த விஜய் இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் தான் ஆட்சியைப் பிடித்தார் என எதிர்கட்சிகள் இப்போது விமர்சித்து வருகின்றன. அதை நிரூபிக்கும் வகையில் விஜய் முதல்வரான பிறகு தமிழக முதல்வரின் அதிகாரபூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து தற்போது 3 மில்லியன் பாலோயர்ஸ்களை கடந்துள்ளது.

- Advertisement -

விஜய் முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பு ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது அந்தப் பக்கத்தை 4 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்ஸ் மட்டுமே பின்தொடர்ந்து வந்தனர். ஆனால் விஜய் பதவியேற்ற 48 மணி நேரத்தில் அது 2 மில்லியன் பாலோயர்ஸ்சை பெற்றது. தற்போது 10 நாட்கள் கடந்த நிலையில் 3 மில்லியன் பாலோயர்ஸ் கடந்துள்ளது.

இதன்மூலம் இந்தியாவிலேயே இன்ஸ்டா தளத்தில் அதிக பாலோயர்ஸ் கொண்ட 2வது முதல்வர் என்ற சாதனையை தமிழக முதல்வர் விஜய் படைத்துள்ளார். முதலிடத்தில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் 3.9 மில்லியன் பாலோயர்ஸ் உடன் இருக்கிறார். அதையும் விஜயின் இன்ஸ்டா பக்கம் சீக்கிரமே கடந்து முதலிடத்தை பிடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி விஜய்க்கு சமூக வலைதளங்களில் தொடர்ந்து மக்கள் கொடுத்து வரும் ஆதரவு தவெக கட்சியினரை உற்சாகமடைய செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்