- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் பூஜா ஹெக்டேவை பின்னுக்கு தள்ளி முன்னேறிய மமிதா பைஜூ - இதே ரேஞ்சுல...

அந்த விஷயத்தில் பூஜா ஹெக்டேவை பின்னுக்கு தள்ளி முன்னேறிய மமிதா பைஜூ – இதே ரேஞ்சுல போனா விஜய்க்கு ஜோடி மமிதாதான் – பீஸ்ட் நாயகியை கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் தளபதி 69 என்ற தனது அடுத்த படத்தில் நடிக்கிறார். இதுதான் தனது கடைசி படம் என்று ஏற்கனவே விஜய் அறிவித்து விட்டார். இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார். பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் முதன்முறையாக இந்த படத்தை தயாரிக்கிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது.

நேற்று தளபதி 69 படத்தின் பட பூஜை சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் பட்டுவேட்டி சட்டையில் விஜய் கலந்துக்கொண்டார். மேலும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிற பூஜா ஹெக்டோ, விஜய்க்கு தங்கையாக நடிப்பதாக கூறப்படுகிற பிரேமலு பட நாயகி மமிதா பைஜூ, வில்லன் நடிகர் பாபி தியோல் மற்றும் படத்தின் இயக்குனர் எச் வினோத் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

- Advertisement -

நேற்று படபூஜை நடந்த நிலையில், இன்று பையனூரில் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பை துவக்கி விட்டனர். அங்கு போடப்பட்டுள்ள ஷெட்டில் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்ட பிறகு, பிரேக் எடுத்துக்கொள்ளும் நடிகர் விஜய், வரும் 27ம் தேதி நடக்கும் தனது கட்சி மாநாட்டை முடித்த பிறகுதான், மீண்டும் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பில் இணைகிறார்.

தளபதி 69 படத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், கவுதம் மேனன், நரேன், நடிகை பிரியாமணி உள்ளிட்டோர் நடிப்பதாக ஏற்கனவே படத்தை தயாரிக்கும் கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் போஸ்டர்கள் வெளியிட்டு அறிவித்துள்ளது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அனல் அரசு சண்டைகாட்சிகளை அமைக்கிறார். ஒளிப்பதிவாளராக சத்யம் குரியன் உள்ளிட்டோர் பணிபுரிய இருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடந்த தளபதி 69 பட பூஜை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகை பூஜா ஹெக்டே, விஜயுடன் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். இவர் ஏற்கனவே விஜயுடன் பீஸ்ட் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். இது விஜயுடன் அவர் ஜோடி சேரும் 2வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் இந்த படத்தில் நடிக்க உள்ள பிரேமலு பட நாயகி மமிதா பைஜூவும் நேற்று விஜயுடன் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ இருவருமே விஜயுடன் இருந்த தங்களது புகைப்படங்களை தங்களது இன்ஸ்டா பக்கங்களில் அப்டேட் செய்தனர். இதில் 27 மில்லியன் பாலோயர்ஸ் வைத்துள்ள பூஜா ஹெக்டேவுக்கு 14 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன. ஆனால் 3 மில்லியன் பாலோயர்ஸ் வைத்துள்ள மமிதா பைஜூவுக்கு 16 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன. அதனால் அதிக வரவேற்பு பெற்ற மமிதா பைஜூதான் நாயகியாக நடிக்க வேண்டும் என்று தளபதி ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்