- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்த மாதம் இரண்டு வார இடைவெளியில் வெளியாகும் இரண்டு மிகப்பெரிய திரைப்படங்கள்... கொண்டாடத் தயாராகும் தமிழ்...

அடுத்த மாதம் இரண்டு வார இடைவெளியில் வெளியாகும் இரண்டு மிகப்பெரிய திரைப்படங்கள்… கொண்டாடத் தயாராகும் தமிழ் சினிமா ரசிகர்கள்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் வரும் ஆறு மாதங்கள் மிகப் பரபரப்பாக போகக்கூடிய நாட்கள் தான் என்று கூற வேண்டும். அந்த அளவுக்கு பல முக்கியமான திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இந்த வருடம் தொடங்கியது முதல் பார்க்கும்போது, அந்த அளவு பெரிய திரைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை.

 

- Advertisement -

குறிப்பாக பொங்கலுக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனத்தையே பெற்றன. இதன் பிறகு வெளியான ரஜினியின், லாக் சலாம் திரைப்படமும் அந்த அளவு வரவேற்பை பெறவில்லை.

 

- Advertisement -

தற்போது வரை வெளியான தமிழ் திரைப்படங்களில், நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவித்து இருப்பது கருடன் திரைப்படம் மட்டும் தான். சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சசிகுமார் உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் வெற்றிவாகை சூடி இருக்கிறது.

 

வெற்றிமாறன் கதையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கி இருந்தார். படம் வெளியான ஒரு வாரத்திலேயே கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக வரும் வெள்ளிக்கிழமை விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் வெளியாகிறது. இது அவரின் ஐம்பதாவது திரைப்படம் என்பதால் சற்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

குரங்கு பொம்மையை எடுத்த நிகிலன் சாமிநாதன் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அடுத்த மாதம் இரண்டு முக்கிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இதில் முதலில் நாம் பார்க்கப் போவது இந்தியன் பார்ட் 2. நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த திரைப்படத்தை ஷங்கர் வெற்றிகரமாக முடித்திருக்கிறார். முதல் பாகம் மிகப் பெரிய வெற்றியை அடைந்ததால், இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது ஜூலை பன்னிரண்டாம் தேதி வெளியாகிறது.

 

அடுத்ததாக நாம் பார்க்கப் போகும் திரைப்படம் ராயன். தனுஷின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகி இருக்கும் இதில் ஏராளமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம் அடுத்த மாதம் 26ம் தேதி வெளியாகிறது.

 

- Advertisement -

சற்று முன்