- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த விஷயம் கூட தெரியாமலா இசை வெளியீட்டு விழாவை நடத்துவாங்க? - கமல் மற்றும் ஷங்கரை...

இந்த விஷயம் கூட தெரியாமலா இசை வெளியீட்டு விழாவை நடத்துவாங்க? – கமல் மற்றும் ஷங்கரை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள் !

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 1ம் தேதி, சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், இயக்குனர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், அதிதி ஷங்கர், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் நடந்த சொதப்பல்கள், இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பல சினிமா விழாக்களை கண்ட நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் இப்படி ஒரு குளறுபடியான விழா ஏற்பாடு எப்போதுமே நடந்தது இல்லை என்று பல விஷயங்களை குறிப்பிட்டு கிண்டலடிக்கின்றனர்.

- Advertisement -

முதல் விஷயம், விழா மேடையில் வரிசைகளை ஒதுக்குவதில் முதல் குளறுபடி நடந்திருக்கிறது. இதில் விஐபி, எம்ஐபி ((மோஸ்ட் இம்பார்ட்டென்ட் பெர்சன்ஸ்) என, முதல் இரண்டு வரிசை டிக்கெட்டுகளை மொத்தமாக கமல்ஹாசனே வாங்கியிருக்கிறார். இதனால் முதல் இரண்டு வரிசைகளை கமலின் அன்புக்குரியவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

அதன்பிறகு நேரு இண்டோர் ஸ்டேடியம், மிகப்பெரிய அளவில் இருப்பதால், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்தால் மட்டுமே அரங்கம் நிரம்பும். ஆனால் கல்லூரி மாணவ, மாணவியர் விழாவுக்கு வர முடியவில்லை. காரணம், கல்லூரிகளுக்கு தற்போது கோடை விடுமுறை காலம். அதன்பிறகு கூட்டம் சேர்க்க, கல்லூரி விடுதியில் தங்கியிருந்தவர்களை எல்லாம் அழைத்துவரச் செய்திருக்கின்றனர். கல்லுாரிகளுக்கு சம்மர் லீவ் என்ற அடிப்படை விஷயம் கூட தெரியாமல், அவர்களை விழாவுக்கு அழைத்துள்ளனர்.

- Advertisement -

மாலை 5 மணிக்கு விழா துவங்கி, இரவு 10 மணிக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டிருந்த இந்த விழா, இரவு 1 மணிக்கு மேல் தான் நிறைவடைந்துள்ளது. விழாவில் பங்கேற்ற ரசிகர்களுக்கு, மற்றவர்களுக்கு உணவு, சினேக்ஸ், குடிநீர் வசதி என எதுவுமே இல்லை. இதனால் பசியோடும், தாகத்தோடும் விழாவில் பலரும் தவித்து போயிருக்கின்றனர்.

இதில் சிலம்பரசன், தனியாக ஒரு பில்டப் செய்திருக்கிறார். இரவு 10 மணிக்கு விழாவுக்கு வந்து, ஒட்டுமொத்த மீடியாவின் பார்வையை தன் பக்கம் திருப்பியிருக்கிறார். தக்லைப் ஷூட்டிங் இருந்ததால் தாமதம் எனவும் கூறியிருக்கிறார். டைரக்டர் மணிரத்னத்திடம் முதலிலேயே கூறியிருந்தால், அவரை 5 மணிக்கே அனுப்பி இருப்பாரே, பில்டப் செய்வதற்கு என்றே, 10 மணிக்கு சிம்பு வந்து, அலப்பரை செய்திருப்பதாகவும் நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர். இதற்கெல்லாம் மேலாக, அமைச்சர் உதயநிதியை பாராட்டி, அரசியல்வாதியாக தன்னை வெளிப்படுத்தி கமல்ஹாசனும் பார்வையாளர்களை, ரசிகர்களை எரிச்சல்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்