நடிகர் ரஜினிகாந்த், தில்லு முல்லு படத்தில் நடித்த போது லதாவை திருமணம் செய்துக்கொண்டார். அவர் சினிமாவில் பாடகியாக இருந்தவர். நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் மனைவி வழி உறவினர். அனிரூத்தின் பெற்றோர், லதாவின் நெருங்கிய உறவினர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. ரஜினி, லதாவை விரும்பிய நிலையில், முதலில் யோசித்த லதா குடும்பத்தினர், எம்ஜிஆர் பேசிய பிறகுதான், திருமணத்துக்கு சம்மதித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் – லதா திருமணம் திருப்பதியில் சிறப்பாக நடந்தது. திருமணத்துக்கு முன்பும், பின்பும் ரஜினிக்கு மதுப்பழக்கம், புகைப்பழக்கம் இருந்தது. அதனால் படப்பிடிப்பு நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் போதையில் இருப்பார். பாக்கெட் பாக்கெட்டாக சிகரட்டை ஊதி தள்ளுவார். மதுபான வகைகளை குடித்துக்கொண்டே இருப்பார். போதை பாக்கு வகைகளை வாயில் மென்றுக்கொண்டே இருப்பது அவரது வழக்கமாக அப்போது இருந்திருக்கிறது.
துவக்கத்தில் இருந்தே ரஜினியை மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்க்குமாறு பலமுறை லதா கூறினார். ஆனால் ரஜினி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த நடிகர் ரஜினிகாந்த், லதாவை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.
இதுகுறித்து தகவலறிந்த டைரக்டர் கே பாலச்சந்தர் நடிகர் ரஜினிகாந்தை நேரில் அழைத்து பேசியிருக்கிறார். அப்போது ரஜினியிடம் பேசிய அவர், நடிகர் கமல்ஹாசன் நல்ல பொசிஷனில் இருந்தார். அவர் மனைவியை விவாகரத்து செய்த பிறகு அவரது மார்க்கெட் சரிந்து போய்விட்டது. அவரது இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
கமலுக்கு பிறகு இப்போது நீதான், தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் பொசிஷனில் இருக்கிறார். உனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை நீ யோசித்து பார்க்க வேண்டும். மனைவியை விவாகரத்து செய்துவிட்டால், உன்னுடைய பேரும் நிச்சயமாக கெடும். அதனால் இமேஜ் பாதிக்கும். உன்னுடைய இடத்தை பிடிக்க நிறைய பேர் வரிசையில் காத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் இதே நிலையில் இருந்தால்தான் நீ நம்பர் ஒன் பொசிஷனில் இருக்க முடியும். உன் சினிமா எதிர்காலம், உன் பெண் குழந்தைகளின் எதிர்காலம் இதுபற்றி நன்றாக யோசித்துவிட்டு பிறகு முடிவெடு என்று கூறியிருக்கிறார். அதன்பிறகுதான், ரஜினி மிரண்டு போய் இந்த விவாகரத்து என்ற முடிவில் இருந்து பின்வாங்கியிருக்கிறார் என, பல ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த தகவலை பிரபல நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் கூறியிருக்கிறார்.





