இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 50 பரோட்டா சாப்பிடும் காமெடி காட்சியின் மூலம் இந்த படத்தில் தான் நடிகர் சூரி பிரபலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் பல படங்களில் நடித்தார்.
அதில் ஜீவா சிலுக்குவார்பட்டி சிங்கம் முண்டாசுப்படி ராட்சசன் மாவீரன் கிட்டு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. கட்டா குஸ்தி படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. லால் சலாம் படத்திலும் விஷ்ணு விஷால் நடித்திருந்தார்.
விஷ்ணு விஷால் நடிப்பது மட்டுமின்றி படங்களை அவரே சொந்தமாக தயாரிக்கவும் செய்கிறார். அவரது நடிப்பில் உருவான சில படங்கள் அவரே சொந்தமாக தயாரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது படங்கள் பெரிய வெற்றியை பெறாத போதும் தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.
இதுகுறித்து வீடியோ ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறியதாவது, சினிமாவில் பெரிய அளவில் வெற்றிப் படங்களை கொடுக்காதவராக தான் நடிகர் விஷ்ணு விஷால் இருந்து வருகிறார். அவரது படங்கள் சமீபத்தில் எதுவும் பெரிய வெற்றியை பெற்றதாக தெரியவில்லை.
எனினும் தொடர்ந்து படங்களை தயாரிக்கவும் செய்கிறார். தொடர்ச்சியாக படங்களிலும் நடித்து வருகிறார். பெரிய அளவில் வரவேற்பும் வெற்றி படங்களை தராத நிலையிலும் நடிகர் விஷ்ணு விஷால் எப்படி தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கிறார் என்பதற்கான காரணம் சமீபத்தில்தான் தெரிய வந்துள்ளது. புதிய படங்களுக்கு டிஜிட்டல் ரைட்ஸ் என்பது வணிக ரீதியாக மிக முக்கியமானதாக உள்ளது.
தமிழில் டிஜிட்டல் ரைட்ஸ் பெறும் பல ஓடிடி நிறுவனங்களில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு மிக நெருக்கமான நண்பர்கள் இருக்கின்றனர். அடிக்கடி நேரில் சந்தித்துக்கொள்வது, வாடா போடா என ஒருமையில் பேசிக்கொள்ளும் அளவுக்கு ஓடிடி தளங்களில் அவரது நண்பர்கள் முக்கிய பொறுப்புகளில் இருப்பதால் விஷ்ணு விஷால் நடித்த படங்கள் எந்த தடையும் இன்றி நல்ல விலைக்கு டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனையாகிறது. அதனால்தான் அவரால் தாக்கு பிடிக்க முடிகிறது என்று ஜெ பிஸ்மி இந்த புதிய தகவலை கூறியிருக்கிறார்.





