விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் துவங்கி, ஜனவரி மாதம் இறுதியில் முடிவடைவது வழக்கமாக உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில், 8வது சீசனில் நடிகர் விஜய் சேதுபதி அந்த பணியை செய்து வருகிறார்.
அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி பெற நடிகர் கமல்ஹாசன் 45 நாட்கள் சென்றுவிட்டதால், இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி பங்கேற்று நடத்தி வருகிறார். ஆனால் அடுத்த 2025ம் ஆண்டில் மீண்டும் கமல்ஹாசன் பிக்பாஸ் தொகுப்பாளராக பணிசெய்ய வந்துவிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது 12 வாரங்களை கடந்து 13வது வாரத்தில் சென்றுக்கொண்டு இருக்கிறது. கடந்த வாரத்தில் முக்கிய போட்டியாளர்களாக வீட்டுக்குள் இருந்த அன்ஷிதா, ஜெப்ரி ஆகியோர் வெளியேற்றப்பட்டு விட்டனர். இப்போது வீட்டுக்குள் 10 போட்டியாளர்கள் உள்ளனர்.
கடந்த 7 ஆண்டுகளில் ஆரவ் ஆரி ராஜூ அசீம் ரித்விகா முகின் அர்ச்சனா ஆகியோர் டைட்டில் வின்னர்களாக வெற்றி பெற்றுள்ளனர். இந்த முறை யார் டைட்டில் வின்னர் என்பதில் பலத்த போட்டி நிலவுகிறது. எனினும் இப்போதைய நிலவரப்பட்டி இந்த 2 போட்டியாளர்களில் ஒருவர்தான் பிக்பாஸ் டைட்டில் வின்னராக வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த 8வது சீசனில் கலந்துக்கொண்டவர்களில் அன்ஷிதா அதிக அளவில் கவனம் ஈர்த்தார். அதனால் அவர் டைட்டில் வின்னராக வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. ஆனால் அவர் வெளியேற்றப்பட்டு விட்டார். ஜாக்குலின், ராணவ், சௌந்தர்யா, தீபக், பவித்ரா, மஞ்சரி, முத்துக்குமரன், ரயான் அருண் பிரசாத் விஷால் உள்ளிட்ட 10 பேர் உள்ளனர்.
பிக்பாஸ் வீட்டுக்குள் இப்போது உள்ள 10 பேரில், வரும் 2 வாரங்களில் 4 முதல் 5 போட்டியாளர்கள் எலிமினேசன் முறைப்படி வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளது. இதில் இறுதியாக ஜாக்குலின், சௌந்தர்யா, தீபக், முத்துக்குமரன், ரயான் ஆகிய 5 பேர் இருப்பார்கள். இதில் சௌந்தர்யா அல்லது முத்துக்குமரன் இருவரில் ஒருவர் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கடைசி நேரத்தில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் கூறியதை போல ஜாக்குலின் கூட டைட்டில் வின்னராகலாம்.





