- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபு குஷ்பு நடித்த சின்னதம்பி படம், 1990களிலேயே இத்தனை கோடி வசூலை அள்ளியதா -...

பிரபு குஷ்பு நடித்த சின்னதம்பி படம், 1990களிலேயே இத்தனை கோடி வசூலை அள்ளியதா – ஆனா, அவங்களுக்கு கொடுத்த சம்பளம் இவ்வளவுதானா?

- Advertisement -

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்புவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் சின்னதம்பி. இயக்குநர் பி.வாசு உள்ளிட்ட மூன்று பேருக்குமே, இந்த படம், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றத்தை முன்னேற்றத்தை ஏற்படுத்திய படமாக அமைந்தது.

சின்னதம்பி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் குஷ்பு. குஷ்புவுக்கு கோயில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் உருவானது சின்னதம்பி படத்தை பார்த்துதான். இதற்கு பிறகுதான் குஷ்புவுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தது.

- Advertisement -

சின்னதம்பி படத்தின் மற்றொரு பிளஸ் பாயிண்ட், இளையராஜாவின் இசையில் உதயமான பாடல்கள். போவோமா ஊர்கோலம் ஒலிக்காத வீடுகளே இல்லை எனலாம். மற்றொரு பிளஸ் பாயிண்ட் இந்த படத்தில் மாலைக்கண் பாதிப்பு உள்ளவராக நடித்த கவுண்டமணியின் காமெடி காட்சிகள் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் குஷ்புவுக்கு பதிலாக வேறு நடிகையை நடிக்க வையுங்கள். அவர், இந்தியில் இருந்து தமிழுக்கு வந்தவர். அவரது கேரக்டர் இந்த படத்தில் சரியாக வராது என தயாரிப்பாளர்கள பலரும் மறுத்த நிலையில், குஷ்புதான் இதில் நாயகி. அவர் நடிக்கவில்லை என்றால், இந்த படமே நான் எடுக்கவில்லை என்று மறுத்திருக்கிறார் பி.வாசு.

- Advertisement -

பிரபுவுக்கு, சின்னதம்பிக்கு பிறகு பெரிய அளவில் பேசப்பட்ட படம் எதுவுமே இல்லை என்று கூறலாம். அடுத்த பல படங்கள் பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு நடித்திருந்தாலும், இந்த படம் அளவுக்கு அந்த படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. பிரபு – குஷ்புவின் நெருக்கமான உறவுக்கு சின்னதம்பிதான் அடித்தளம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 1991ம் ஆண்டில், அதாவது 32 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட சின்னதம்பி படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 80 லட்சம் தான். ஆனால், இந்த படம் மொத்தமாக வசூலித்தது 9.20 கோடி ரூபாய். அதாவது, 8 கோடியே 40 லட்சம் ரூபாய், லாபம் கிடைத்துள்ளது. பல தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது. 9 தியேட்டர்களில் 365 நாட்கள் ஓடிய படம். ஆனால் படத்தில் நடித்த பிரபுவுக்கு 11 லட்சம் ரூபாய், குஷ்புக்கு 4 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளமாக தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்