தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடந்த தீபாவளியன்று அவரது நடிப்பில் வெளிவந்த அமரன் படம், இதுவரை உலகளவில் 321 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 155 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் அதிகபட்ச வசூல் சாதனை படமாக அமரன் உள்ளது.
அமரன் படத்தை தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் ருக்மணி வசந்த் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ளதால், தனது 24வது படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் தயாராகி விட்டார்.
டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் எஸ்கே 24 படத்தில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். அடுத்த வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த படத்தின் டைட்டில் பிப்ரவரி 17ம் தேதியன்று அறிவிக்கப்பட உள்ளது. ஏனென்றால் அன்று நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் என்பதால் இந்த படத்தின் டைட்டிலை அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த படத்தின் டைட்டில் பாஸ் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி விட்டது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படம், சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் அவர் நடிக்கும் 2வது படமாகும். இதற்கு முன்பு 2022ம் ஆண்டில் வெளியான டான் படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கினார். நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயனின் அப்பா கேரக்டரில் சமுத்திரக்கனி, வில்லனாக எஸ்ஜே சூர்யா மற்றும் சூரி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சிபி சக்ரவர்த்தி இயக்கிய முதல் படம் இது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனமும் படத்தை தயாரித்திருந்தது. இப்போது மீண்டும் 2வது முறையாக சிவகார்த்திகேயன், சிபி சக்ரவர்த்தி ஜோடி பாஸ் படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, வில்லனாக எஸ்ஜே சூர்யா நடிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. டான் படத்திலும் வில்லனாக எஸ்ஜே சூர்யாதான் நடித்திருந்தார். 2வது முறையாக இந்த படத்திலும் அவரே வில்லனாக நடிக்கிறார். மேலும் இன்று இந்த படத்தின் பூஜையுடன் ஷூட்டிங் துவங்க திட்டமிட்டு இருந்தது. ஆனால் புயல் மழை எச்சரிக்கை காரணமாக, அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.





