- Advertisement -
Homeபொழுதுபோக்குசுருள்முடி கொண்ட சீதாதேவியாக சாய்பல்லவியை திரையில் எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை - சீதையாக நடித்த...

சுருள்முடி கொண்ட சீதாதேவியாக சாய்பல்லவியை திரையில் எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை – சீதையாக நடித்த சீரியல் நடிகை விமர்சனம்!

- Advertisement -

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் அமரன் மாரி 2 என்ஜிகே உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் சாய் பல்லவி. தொடர்ந்து தெலுங்கிலும் சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை சாய் பல்லவி இப்போது பாலிவுட்டிலும் முன்னணி நாயகியாக நடித்து வருகிறார். இந்தியில் நடிகர் ரன்பீர் கபூர் நடிகை சாய் பல்லவி நடிகர் யஷ் நடிப்பில் இராமாயணா என்ற படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இதில் இராமபிரானாக ரன்பீர் கபூர் சீதா தேவியாக சாய்பல்லவி இராவணன் கேரக்டரில் நடிகர் யஷ் ஆகியோர் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இராமாயணா படத்தின் பிரத்யேக டிரெய்லர் வெளியீடு நிகழ்வு நடந்தது.

- Advertisement -

அதில் இராமாயணா படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் நடிகை சாய்பல்லவி சீதாதேவியாக நடிப்பது குறித்து நடிகை தீபிகா சிக்லியா பேசியிருக்கிறார். புகழ்பெற்ற இராமாயணம் இந்தியில் வெளிவந்த தொலைக்காட்சி தொடரில் சீதா தேவியாக நடித்த தீபிகா சிக்லியா கூறியதாவது, நான் சாய் பல்லவியின் நடிப்பை பார்த்திருக்கிறேன். அவர் மிகவும் அற்புதமான கலைஞர்.

ஆனால் சீதையாக அவர் திரையில் எப்படி தெரிவார் என்று எனக்கு இப்போது தெரியாது. திரைவில் பார்த்த பிறகு தான் அதை முடிவு செய்ய முடியும். இராமாயணத்தில் சீதையின் தோற்றம் பற்றிய தெளிவான வர்ணனைகள் உள்ளன. பாதாம் போன்ற கண்கள் குறிப்பிட்ட உயரம் கூந்தல் மற்றும் மேனி நிறம் என அதில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய இராமாயணம் சீரியல் இயக்குனர் இராம நந்த் சாகர் அந்த அம்சங்களை தான் தேடினார்.

- Advertisement -

அதை என்னிடம் கண்டறிந்து சீதாதேவியாக என்னை அந்த சீரியலில் நடிக்க வைத்தார். அது மட்டுமல்லாமல் இராமாயணத்தில் சுருள் முடி கொண்ட சீதையை பற்றிய எந்த குறிப்பு இல்லை. கொரோனா லாக் டவுன் காலத்தில் எங்களது பழைய இராமாயணம் சீரியல் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு இன்றைய புதிய தலைமுறையினரின் மனதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் அந்த சீதா தேவி பிம்பத்தை மக்கள் மனதில் இருந்து எளிதில் அழித்துவிட முடியாது என்று தீபிகா சிக்லியா கூறியிருக்கிறார். தற்போது உருவாகி வரும் இராமாயணம் படத்தில் சீதாதேவியாக நடிக்கும் நடிகை சாய் பல்லவிக்கு சுருள்முடி இருப்பதால், சுருள்முடி தோற்றத்தில் சீதேவியை திரையில் எப்படி பார்க்க முடியும் என்று தீபிகா சிக்லியா மறைமுகமாக சுட்டிக்காட்டி விமர்சனம் செய்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்