- Advertisement -
Homeபொழுதுபோக்குஜேசன் சஞ்சய் இயக்கும் படம் டிராப் ஆகி விட்டதா? வெளியான லேட்டஸ்ட் தகவல் - விஜயை...

ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் டிராப் ஆகி விட்டதா? வெளியான லேட்டஸ்ட் தகவல் – விஜயை போலவே அவரது வாரிசும் உஷாரா இருந்திருக்காரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய் இப்போது தனது 69வது படம் ஜனநாயகன் என்ற படத்தில் எச் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்து விட்டார். ஆனால் தந்தை விஜய் விட்டுச் செல்லும் இடத்தை நிரப்ப அவரது மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராக வந்துவிட்டார்.

வழக்கமாக நடிகர்களின் மகன்கள் அவர்களும் ஹீரோக்களாகவே சினிமாவில் வலம் வர விருப்பம் காட்டுவர். ஆனால் விஜய் மகன் சஞ்சய் ஜேசன் தனது அப்பா போல நடிகராக விரும்பாமல் தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் போல இயக்குனராக ஆசைப்பட்டிருக்கிறார். சிறுவயதிலேயே குறும்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டிய அவர், டைரக்‌ஷன் தொடர்பான படிப்பை வெளிநாட்டில் முடித்துவிட்டு சென்னை திரும்பியிருந்தார்.

- Advertisement -

இப்போது அப்பா விஜய் சினிமாவை விட்டு வெளியேறும் அதே நேரத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரிக்கும் படத்தை ஜேசன் சஞ்சய் இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல் படத்திலேயே அவரது சம்பளம் ரூ. 10 கோடி என்று சொல்லப்படுகிறது. துருவ் விக்ரம் சூரி விஜய் சேதுபதி என பலரிடம் அவர் கேட்ட நிலையில் கடைசியில் அவரது இயக்கத்தில் முதல் படத்தில் நடிப்பது தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. சென்னை வடபழனியை அடுத்துள்ள தண்டையார் பேட்டையில் 3 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடந்த நிலையில், அதற்கு பின் படப்பிடிப்பு நடக்கவில்லை. அதனால் படம் டிராப் ஆகி விட்டதாக தகவல் பரவியது.

- Advertisement -

ஆனால் உண்மையான லேட்டஸ்ட் தகவலின் படி, தண்டையார்பேட்டை பகுதியில் முதல் ஷெட்யூல் 3 நாட்கள் மட்டுமே திட்டமிட்டதாகவும் அதன்படி 3 நாட்கள் ஷூட்டிங் முடித்து விட்டதாகவும் தெரிய வந்துள்ளது. அடுத்தகட்டமாக ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் இலங்கையில் நடக்க உள்ளதாகவும் யாழ்பாணம், கொழும்பு பகுதிகளுக்கு நேரில் சென்று படக்குழு லொக்கேஷன் பார்த்து திரும்பி விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி விடாமுயற்சி படம் ரிலீஸாவதற்கு முன்பே, இயக்குனர் ஜேசன் சஞ்சய், படத்தை தயாரிக்கும் லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்திடம் ரூ. 25 கோடி தொகை பெற்றுவிட்டதாகவும் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படத்தை முடித்துக்கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் பணம் பிரச்னையால் ஷூட்டிங் தடைபட வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது. விஜயை போலவே அவரது வாரிசும் புத்திசாலித்தனமாக படப்பிடிப்பை தடையின்றி நடத்திக் கொள்ள இப்படி ரூ. 25 கோடி முன்பே பெற்றதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்