- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தில் இப்படி ஒரு காட்சியா? ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா? - ஆனா...

சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தில் இப்படி ஒரு காட்சியா? ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா? – ஆனா கதையே அதுதானே ப்ரோ?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் 230க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் நடிப்பது மட்டுமின்றி, நடனக் கலைஞராகவும் இருக்கிறார். பல படங்களில் சொந்தக் குரலில் பாடுகிறார். பல படங்களை டைரக்ட் செய்கிறார். அவரே படங்களை தயாரிக்கிறார். கதை, திரைக்கதை ஆசிரியராகவும் இருக்கிறார். மேலும் மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் கட்சித் தலைவர் கமல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல், அவர் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் கொண்டவர். கடந்த 1980களின் இறுதியில் வெளியான நடிகர் சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற படத்தை தயாரித்தது நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

இப்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் ராணுவ வீரர் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

நேற்று அமரன் படத்தில் சாய்பல்லவி குறித்த அறிமுக வீடியோ வெளியாகி வைரலானது. இதில் ரெபேக்கா வர்கீஸ் என்ற பெயரில் உள்ள கேரக்டரில் சாய் பல்லவி நடித்திருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை வைத்துதான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன், இதுவரை 23 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். அதில் அமரன் படம், வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது. இதுவரை நடித்த படங்களில் நடிகர் சிவகார்த்திகேயன் இறந்து விடுவது போல, படம் வெளியாகவில்லை. சீமராஜா படத்தில் ராஜாவாக வரும் சிவகார்த்திகேயன் இறந்தாலும், அவரது மகன் சிவகார்த்திகேயன் படத்தில் இருப்பார்.

ஆனால் அமரன் படத்தில், படத்தின் கிளைமாக்ஸில் நடிகர் சிவகார்த்திகேயன் இறப்பது போன்றுதான் காட்டப்படுகிறது. ஏனெனில் படத்தின் கதையே மறைந்த ராணுவ மேஜரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது என்பதால், அந்த கதைப்படி சிவகார்த்திகேயன் இறந்த பிறகு அவரது மனைவி சாய்பல்லவி தன் கணவருக்காக அசோக் சக்ரா விருதை பெறுவதுதான் ஹைலைட். அதனால் சிவகார்த்திகேயன் இறப்பது போன்ற கிளைமாக்ஸ் காட்சியை ரசிகர்களை ஏற்பார்களா, என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்