- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல் களத்தில் இறங்கிய நடிகர் விஜய் - அவரது கடைசி படத்தில் நடிக்க விஜய் நிர்ணயித்த...

அரசியல் களத்தில் இறங்கிய நடிகர் விஜய் – அவரது கடைசி படத்தில் நடிக்க விஜய் நிர்ணயித்த சம்பளம் – அடேங்கப்பா, தலையே சுத்திப் போச்சு!

- Advertisement -

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி பெயரை அறிவித்து விட்டார் நடிகர் விஜய். டிவிகே தலைவராக, 2026ம் ஆண்டில் வரும் சட்டசபை தேர்தலை அவர் எதிர்கொள்கிறார். இந்த தேர்தலை பொருத்த வரை மும்முனைப் போட்டி நடக்கப் போகிறது. திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளுக்கு முக்கிய எதிரியாக விஜய் கட்சியான தவெக இருக்கும் என்றும் இப்போதே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய் இப்போது தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) என்ற இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வரும் விஜய், வரும் மார்ச் மாதத்துக்குள் இந்த படப்பிடிப்பை முடித்து விடுகிறார். அடுத்து ஏப்ரல் மாதத்தில் மதுரையில் மாநாடு நடத்தி, கட்சிக்கொடி மற்றும் கட்சியின் கொள்கைள் குறித்து பேச இருக்கிறார். இதற்காக லட்சக்கணக்கான ரசிகர்களை, கட்சி தொண்டர்களை மதுரையில் திரட்ட இப்போது ஆயத்த பணிகள் துவங்கி விட்டன.

- Advertisement -

வருகிற 2026ம் ஆண்டில்தான் சட்டசபை தேர்தல் வருகிறது. அதற்கு முன்பாக ஒரு அரசியல் சார்ந்த படத்தை தந்து, மக்களுக்கு ஒரு எழுச்சியை தந்துவிடலாம். அதாவது நாடோடி மன்னன் படத்தில் எம்ஜிஆர், தான் அரசியலுக்கு வந்தால் என்ன செய்வேன் என்பதை எல்லாம் கோடிட்டு காட்டியதை போல நாமும் தமிழக மக்களுக்கு காட்டி விடலாம் என முடிவு செய்திருக்கிறார் விஜய்.

எனவே ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த டிவிவி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் விஜயின் 69வது படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. ஏனெனில் விஜய் அரசியலில் முழு நேரமும் கவனம் செலுத்த துவங்கி விட்டால், படங்களில் அடுத்து நடிக்க வாய்ப்பில்லை.எனவே, இது கடைசி படம் என்பதால் ஒட்டுமொத்த மாஸ் கட்டும் விஜய் படமாக இது உருவாக்கப்படுகிறது.

- Advertisement -

இந்த படத்தை இயக்குநர் ஷங்கர், அல்லது எச் வினோத், அல்லது கார்த்திக் சுப்பராஜ், வெற்றிமாறன் அல்லது அட்லி இவர்களில் யாரேனும் ஒரு இயக்குநர்தான் இயக்குவார் என்று கூறப்படுகிறது. இந்த படம், அரசியலுக்கு விஜய் வருவதற்கான என்ட்ரியாக, மக்கள் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும். அந்த வகையில் கதை, திரைக்கதை, வசனம், காட்சிகள் கொண்ட படமாக, ஆரம்பம் முதல் இறுதி வரை இருக்க வேண்டும் என்றும் விஜய் கூறியிருக்கிறார்.

தனது 69வது, அதாவது கடைசி படத்தில் நடிக்க விஜய் இந்த படத்தில் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நடித்து வரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்துக்கு விஜய் வாங்கிய சம்பளம் , ரூ. 200 கோடி என்ற நிலையில், தனது கடைசி படத்துக்கு விஜய் நிர்ணயித்துள்ள சம்பளம் ரூ. 250 கோடியாம். அதை தருவதற்கு தயாரிப்பு நிறுவனமும் மகிழ்ச்சியாக ஓகே சொல்லி இருக்கிறது. இந்த படம் விஜயின் அரசியல் வருகை குறித்த டிரெயிலராக இருக்கும் என்பதால், வசூல் ஆயிரம் கோடி முதல், 1500 கோடி ரூபாய் வரை அள்ளும் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

சற்று முன்