- Advertisement -
Homeபொழுதுபோக்குஆர்ஜே பாலாஜி நடிப்பில் வரும் 29ம் தேதி வெளியாகும் சொர்க்கவாசல்; இந்த படத்தின் உண்மையான கதை...

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வரும் 29ம் தேதி வெளியாகும் சொர்க்கவாசல்; இந்த படத்தின் உண்மையான கதை இதுதான் – வெளியான லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையை துவக்கிய ஆர்ஜே பாலாஜி, பிறகு சினிமாவில் தேவி, கவலை வேண்டாம், நானும் ரவுடிதான் உள்ளிட்ட சில படங்களில் காமெடி ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பிறகு எல்கேஜி படத்தின் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தை அவரே இயக்கி, நாயகனாகவும் நடித்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அடுத்து சத்யராஜ், ஊர்வசி வயதான தம்பதியராக நடித்த வீட்ல விசேஷம் படத்திலும் அவருக்கு நல்ல வெற்றி கிடைத்தது. இப்போது சூர்யாவின் 45வது படத்தையும் ஆர்ஜே பாலாஜி இயக்க கமிட் ஆகியுள்ளார்.

- Advertisement -

இதற்கிடையே அவர் நடித்த சிங்கப்பூர் சலூன் என்ற படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதே போல் மூக்குத்தி அம்மன் 2 படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்காத நிலையில், சுந்தர் சி அந்த படத்தை டைரக்ட் செய்கிறார். அந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக மீண்டும் நயன்தாராவே நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகர் ஆர்ஜே பாலாஜி நடித்த சொர்க்க வாசல் என்ற படம் வருகிற 29ம் தேதி திரைக்கு வருகிறது. ஜெயிலில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

- Advertisement -

கடந்த 1996ம் ஆண்டில் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் ஒரு சிறைச்சாலை இருந்தது. அங்கு ஒருமுறை சிறை கைதிகளுக்கும், அங்கிருந்த வார்டன்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு பெரிய வன்முறையாக வெடித்தது. இதில் சிலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அந்த சிறைச்சாலை இருந்ததால் அந்த காட்சிகள் வீடியோ படமாக எடுகக்ப்பட்டு. மக்கள் மத்தியில் பரவியது.

இப்போது ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியாக உள்ள சொர்க்கவாசல் படம், அந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, 1996ம் ஆண்டில் அந்த சிறைச்சாலையில் நடந்த உண்மை கதையை கொண்டு உருவானதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது. அதனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்