இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த 10ம் தேதி தனது 84வது வயதில் உடல் மூப்பு காரணமாக மறைந்தார். தேனியில் உள்ள வத்தலகுண்டு காட்ரோடு அருகே உள்ள பண்ணை வீட்டில் பாரதிராஜா இறுதி சடங்கு நடந்தது. அப்போது மருமகள் நந்தனா முதல் இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த பாரதிராஜாவின் மகள் ஜனனி அவரை எழுப்பி விட்டுவிட்டு அங்கு அமர்ந்தார். உடனே நந்தனா ஜனனியை திட்டினார். பதிலுக்கு அவர் நந்தனாவின் கையைப் பிடித்து இழுத்து தள்ளிவிட்டார்.
உடனே நந்தனாவும் அதற்கு கோபமாக ரியாக்சன் செய்தார். இவை அனைத்தும் கேமராவில் பதிவான காட்சிகளாகும். அப்போது அங்கிருந்த நடிகை ராதிகா சரத்குமார், ஜனனியை கட்டுப்படுத்தி சமாதானம் பேசி அமைதிப்படுத்தினார். இந்த சம்பவம் மூலம் பாரதிராஜா வீட்டில் மகள் ஜனனி – மருமகள் நந்தனா இடையே பிரச்னை இருப்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாக தெரிய வந்தது. இதற்கு பின்னால் இருப்பது சொத்து பிரச்சனை தான். மகள் ஜனனி அப்பா பாரதிராஜாவை மலேசியாவிற்கு அழைத்துச் சென்று அவரது வீட்டில் 6 மாதங்கள் இருந்த போது எல்லா சொத்தையும் எழுதி வாங்கி விட்டார்.
மனோஜ் மனைவி மற்றும் மகள்களை ஒதுக்கி விட்டனர் என்ற தகவல்கள் இணையத்தில் வைரலானது. மேலும் சொத்துக்கள் தகராறு காரணமாக அந்த குடும்ப உறவுகளில் நிறைய பிரச்னைகள் என்றும் பரவலாக பேசப்பட்டது. இயக்குனர் பாரதிராஜாவின் மச்சான் மனோஜ் குமார். இவர் பாரதிராஜாவின் மனைவி சந்திரலீலாவின் தம்பி. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற பாரதிராஜாவின் மச்சான் மனோஜ் குமார் இதுகுறித்து கூறியதாவது, பாரதிராஜாவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த அரசு அதிகாரிகள் சில நெறிமுறைகளை விதித்திருந்தனர்.
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு அரசு மரியாதை செலுத்த முடியாது என்பதால் அனைத்து குடும்ப சடங்குகளையும் மதியம் 3 மணிக்குள் முடித்துவிட்டு இறுதி ஊர்வலத்தை தொடங்க வேண்டும் என்று கலெக்டரும் போலீஸ் எஸ்பியும் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் நந்தனா தேனிக்கு வந்து சேர மதியம் 2:45 மணி ஆகிவிட்டது. அதனால் சடங்குகள் தாமதமான பதட்டத்திலும் அப்பாவுக்கு அரசு மரியாதை கிடைப்பதில் சிக்கல் வந்துவிடுமோ என்ற மன அழுத்தத்திலும் ஜனனி நந்தனாவிடம், ஏன் இவ்வளவு லேட்டா வந்தே? என்று கேட்டுள்ளார்.
இது ஒரு குடும்பத்தின் சாதாரண நிகழ்வே தவிர சொத்து சண்டை இல்லை. பாரதிராஜா உயிருடன் இருக்கும் போதே தனது பிள்ளைகளுக்கு சொத்துக்களை சமமாக பிரித்து எழுதி வைத்துவிட்டார். இந்த சொத்துக்கள் மூலம் நந்தனாவுக்கு தற்போது மாதம் 6.5 லட்சம் ரூபாய் வரை வாடகை வருமானம் ரெகுலராக போகிறது. அவர்கள் எந்த கஷ்டத்திலும் இல்லை மகள் ஜனனிக்கு 3 வீடுகளை எழுதி கொடுத்துள்ளார்.
மருத்துவமனை செலவுகளுக்கு பணம் கட்டுவதற்காக வீட்டு நிலத்தை விற்கதான் ஜூன் 10ம் தேதி என்னுடைய அக்கா, பாரதிராஜா மனைவி தேனிக்கு சென்றிருந்தார். பாரதிராஜா ஒரு ராஜாவை போல வாழ்ந்த மனிதர். அவரது குடும்பத்தில் உள்ள சின்ன சின்ன மனஸ்தாபங்களை பெரிதாக்கி அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று மனோஜ்குமார் கூறியிருக்கிறார்.





