முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு படைப்பாளி சிறந்த திறமையை வெளிப்படுத்தினால் அவர்கள் பத்திரிகை செய்திகள் வாயிலாக பாராட்டப்படுவார்கள் அல்லது முக்கிய அரசியல் தலைவர்களால் அவர்களது திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் விருதுகளும் பாராட்டுகளும் வழங்கப்படும். அவர்களது படைப்புகளே அவர்களது பெருமையை பேசும்.
ஆனால் இப்போதெல்லாம் சமூக வலைதளங்கள் வாயிலாக இணைய கூலிப்படை வைத்துக்கொண்டு தங்களைப் பற்றி மக்கள் மத்தியில் அதிக புகழ் பரப்பும் ஒரு நிலைக்கு சில படைப்பாளிகள் மாறிவிட்டனர். அன்று திறமையால் கவனிக்கப்பட்டவர்கள் இன்று அதிக அளவில் மக்கள் மத்தியில் அவர்களைப் பற்றி பேசப்படுவதால் அவர்கள் கவனம் பெற்றவர்களாக புகழில் உச்சம் தொட்டவர் போல ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இப்படி மக்கள் மத்தியில் ஒரு போலியான மாய தோற்றத்தை ஏற்படுத்தும் படைப்பாளிகளை நிறைய வாய்ப்புகள் தேடி வந்தாலும் அவர்களின் படைப்புகளில் அந்த அளவுக்கு திறமையை வெளிப்படுத்தாமல் ஒரு கட்டத்தில் அவர்களின் உண்மையான திறமையை வெளிச்சம் போட்டு காட்டி விடுகிறது. ஆனால் எந்த விதமான புகழ் பரப்பும் யுத்திகளையும் பின்பற்றாமல் தனது திறமையால் ஜெயித்த படைப்பாளிகளும் இன்றும் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர்.
அந்த வரிசையில் இசைஞானி இளையராஜா இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் போன்றவர்களை குறிப்பிட்டு சொல்லலாம். அனிருத் சாய் அபயங்கர் போன்றவர்கள் தொடர்ந்து இணையத்தில் கவனிக்கப்படும் நட்சத்திர இசைக் கலைஞர்களாக இருந்த போதிலும் இளையராஜா ஏஆர் ரகுமான் போன்றவர்கள் தங்களை இப்படி மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திக் கொள்ளும் யுத்தியை பின்பற்றாமல் தங்கள் திறமையால் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
அந்த வகையில் இப்போது இந்திய இசைத்துறையில் நம்பர் ஒன் இடத்தில் இசைப்புயல் ஏஆர் ரகுமானுக்கு தான் முதலிடம் என்பது உறுதியாகி உள்ளது. இந்தியில் ரன்பீர் சிங் சாய்பல்லவி நடிப்பில் உருவாகி வரும் இராமாயணா படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் தான். அந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸ் விற்பனை ரூ. 75 கோடிக்கு நடந்துள்ளது. இந்திய அளவில் ஆடியோ ரைட்ஸ் விற்பனையில் ரூ. 75 கோடிக்கு ஒரு படம் விற்பனையாவது இதுவே முதல் முறையாகும்.
இதன் மூலம் இந்தியாவின் நம்பர் ஒன் இசையமைப்பாளர் என்ற பெருமைக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். இதற்கு முன்பு ஷாருக்கான் நடித்த ஜவான் படம் 30 கோடி ரூபாய்க்கு ஆடியோ ரைட்ஸ் விற்பனையானது. அந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தான். ஆனால் அதைவிட இரண்டரை மடங்காக இப்போது 75 கோடி ரூபாய்க்கு ஏஆர் ரகுமான் இசையமைத்த இராமாயணா படத்தின் ஆடியோ ரைட்ஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





