- Advertisement -
Homeபொழுதுபோக்குகேரளாவில் ஐடி ஊழியரை தாக்கிய விவகாரம் - கும்கி படத்தின் நாயகி லட்சுமி மேனனை கைது...

கேரளாவில் ஐடி ஊழியரை தாக்கிய விவகாரம் – கும்கி படத்தின் நாயகி லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்!

- Advertisement -

கேரளாவை சேர்ந்தவர் நடிகை லட்சுமி மேனன். தமிழில் பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். நடிகர் பிரபு மகன் விக்ரம் பிரபு இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். யானை பாகன் கேரக்டரில் நடித்திருந்தார். கும்கி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தொடர்ந்து நடிகை லட்சுமிமேனன் தமிழில் பல படங்களில் நடித்தார். சுந்தரபாண்டியன் பாண்டியநாடு ரெக்க கொம்பன் புலிக்குத்தி பாண்டி சந்திரமுகி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இப்போது யோகிபாபுவுடன் மலை என்ற படத்திலும் லட்சுமி மேனன் நடித்திருக்கிறார். தமிழில் அவருக்கு போதிய பட வாய்ப்புகள் சமீபமாக இல்லை.

- Advertisement -

இந்நிலையில் கேரளாவில் ஐடி ஊழியரை தாக்கிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுடன் இருந்த நடிகை லட்சுமி மேனன் மீதும் போலீஸ் வழக்கு பதிவு செய்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி அளவில் கொச்சியில் உள்ள ஒரு பாரில் நடிகை லட்சுமிமேனன் தரப்புக்கும் ஆலுவாவை சேர்ந்த ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து அன்று இரவு எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தில் லட்சுமி மேனனுடன் வந்தவர்கள் ஐடி ஊழியரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் லட்சுமிமேனன் மற்றும் 3 பேர் மீது எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மிதுன் அனீஸ் மற்றும் சோனமோல் ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

- Advertisement -

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகை லட்சுமிமேனனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்ட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள லட்சுமி மேனனை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வழக்கில் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன் ஜாமீன் கேட்டு நடிகை லட்சுமி மேனன் தரப்பில் கேரளா உயர் நீதிமன்றத்தை நாடினர்.

இந்த வழக்கை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம் நீதிபதி, வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை நடிகை லட்சுமி மேனனை கைது செய்யக்கூடாது என்று நேற்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார். மேலும் இந்த வழக்கு குறித்த விசாரணை, அன்றைய தினமே மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார். ஐடி ஊழியர் – லட்சுமிமேனன் தரப்புகளுக்கு இடையே நடந்த சண்டை வீடியோ காட்சிகளாக இணையத்தில் நேற்று முதல் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்