- Advertisement -
Homeபொழுதுபோக்குரெண்டு, மூனு வருஷத்துக்கு அதை பத்தி எல்லாம் யோசிக்கவே நேரமில்லே - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்...

ரெண்டு, மூனு வருஷத்துக்கு அதை பத்தி எல்லாம் யோசிக்கவே நேரமில்லே – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சொல்வது எதை பற்றி தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில், இது லோகேஷ் கனகராஜ் பீவர் காலம் என்று கூட சொல்லலாம் போலிருக்கிறது. மாநகரம் படம் மூலம் பேசப்பட்ட லோகேஷ் கனகராஜ், கைதி படம் மூலம், தமிழ் சினிமாவில் மொத்த கவனத்தையும் ஈர்த்தார். அடுத்து உலக நாயகன் கமல் நடித்த விக்ரம் என்ற பிளாக்பஸ்டர் மூவி மூலம், தமிழ் சினிமாவையே அதிர வைத்தார்.

இப்போது, தளபதி விஜய் நடித்த லியோ படத்தை இயக்கி, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில், ஸ்டார் டைரக்டராக உயர்ந்திருக்கிறார். இந்த படத்துக்கு பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினியின் 171வது படத்தை இயக்குகிறார். கமல், விஜய், ரஜினி என இப்படி மெகா ஸ்டார்களை அடுத்தடுத்து இயக்கும் ஒரு பெரிய வாய்ப்பு, சுக்கிர திசை அடித்தது போல லோகேஷ்க்கு வாய்த்திருக்கிறது என்றே கோலிவுட்டில் பேசப்படுகிறது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்சம் தொடும் ஒரு இளம் இயக்குநராக வெற்றி பெற்றும் இன்னும் அவர் தனது பழைய நிலையில் சாதாரண மனிதராகவே காணப்படுகிறார். நேர்காணல்களில் பேசுகிறார். எந்தவிதமான மாற்றத்தையும், மாஸ் டைரக்டர் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் மிக எளிதான மனிதராகவே காட்சியளிக்கிறார். இது, தமிழ் சினிமாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்றைய உதவி இயக்குநர்களுக்கு, தமிழ் சினிமாவை ரசிக்கும் ரசிகர்களுக்கு ஒரு புதிய வழித்தடத்தை உருவாக்கி தருபவராக, லோகேஷ் பேசப்படுகிறார்.

அதே வேளையில், லியோ டிரெய்லர் படத்தில் விஜய் பேசிய அந்த வசனம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த படத்தில் வரும் பார்த்திபன் என்ற கேரக்டர், உணர்ச்சிவசப்பட்டு எல்லை மீறிய நிலையில், தன்னிலை மறந்து பேசும் வசனம் அது. அதற்கும், நடிகர் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரை பேச சொன்னதே நான்தான். அதற்கு நான்தான் முழு பொறுப்பு என, தானாக முன்வந்து தவறை ஒத்துக்கொண்டது மிகவும் பாராட்டுக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் – இசையமைப்பாளர் அனிரூத் இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு புதிய படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் கூறுகையில், நானும் அனிரூத்தும் நடிப்பதாக, அப்படி ஒரு பேச்சு நடந்தது உண்மைதான். எனக்கு அன்பறிவு மாஸ்டர் அண்ணன் மாதிரி. அவர் சொன்னால் என்னால் மறுக்க முடியாது. ஆக்சன்தான் எனக்கு பிடித்தது. அதனால், அதையும் செஞ்சுதான் பார்ப்போமே என்றுதான் முதலில் தோன்றியது.

ஆரம்பத்தில் இருந்தே, எனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை சிறிதும் கிடையாது. அப்படி இருந்தால் நானே எழுதி நடித்திருப்பேன். ஆனால், அன்பறிவு மாஸ்டர் என்பதால் மறுக்க முடியவில்லை. ஆனால் நான், அன்பறிவு அண்ணன், அனிரூத் மூவருமே பிஸி என்பதால், அவசரமாக படம் எடுத்து அதை கெடுத்து விடக்கூடாது என்பதால், அதை நிறுத்தி விட்டோம். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு அதை பற்றி நினைக்க கூட நேரமில்லை. அதனால், அப்படியே அதை மூடி வைத்துவிட்டோம், என்று கூறியிருக்கிறார் லோகேஷ்.

- Advertisement -

சற்று முன்