- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படம் ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வமாக அறிவித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம் - பண்டிகையை கொண்டாட...

ஜெயிலர் 2 படம் ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வமாக அறிவித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம் – பண்டிகையை கொண்டாட தயாராகும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

- Advertisement -

கடந்த 2023ம் ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. ரஜினிகாந்த் நடித்த சமீபத்திய படங்களில் மிகப்பெரிய வசூலை குவித்த படம் ஜெயிலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ஜெயிலர் படத்தை இரண்டாம் பாகமாக உருவாக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் அப்போதே அறிவிப்பு வெளியிட்டது. அதுவரை தனது படத்தின் 2ம் பாகத்தில் நடிக்காத நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். நெல்சன் இயக்கத்தில் அந்த படம் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் நடந்தது.

- Advertisement -

இதற்கிடையே ஜெயிலர் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் லால்சலாம் கூலி போன்ற படங்கள் எதிர்பாத்த வெற்றியை பெறாத நிலையில் இப்போது ஜெயிலர் 2 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி உள்ளது. இந்த படத்தில் பல நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கின்றனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படமும் 1000 கோடி ரூபாய் வசூலிக்காத நிலையில் ஜெயிலர் 2 படம் அந்த வசூலை செய்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஜெயிலர் முதல் பாகம் 600 கோடி ரூபாயை கடந்த நிலையில் ஜெயிலர் 2 படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகி உள்ளது. ஜெயிலர் முதல் பாகம் படத்தில் ரஜினிகாந்த் என்ன கெட்டப்பில் இருந்தாரோ அதே தோற்றத்தில் ஜெயிலர் 2 படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மலையாள நடிகர் மோகன்லால் சுராஜ் வெஞ்சரமூடு கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் எஸ் ஜே சூர்யா விஜய் சேதுபதி சந்தானம் யோகி பாபு ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதியை வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 15ம் தேதி ஜெயிலர் 2 படம் ரிலீஸ் என்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வீடியோவில் படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர்கள் நடிகைகளும் இடம்பெற்று இருப்பது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்