- Advertisement -
Homeபொழுதுபோக்குபலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று துவங்கிய ஜெயிலர் 2 படப்பிடிப்பு - முதல் கட்டமாக 15...

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று துவங்கிய ஜெயிலர் 2 படப்பிடிப்பு – முதல் கட்டமாக 15 நாட்கள் கால்ஷீட் தந்த ரஜினிகாந்த்!

- Advertisement -

கடந்த 2023ம் ஆண்டில் அக்டோபர் 10ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. நடிகர் ரஜினிகாந்துக்கு மீண்டும் ஒரு பாட்ஷா என்று சொல்லும் அளவுக்கு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்த அவர், இந்த படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்தது பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. மலையாள நடிகர் மோகன்லால் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் தெலுங்கு நடிகர் சுனில் என பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் இருந்தனர்.

- Advertisement -

மேலும் காவலய்யா என்ற ஐட்டம் பாடலுக்கு நடிகை தமன்னாவின் குத்தாட்டம், ஜெயிலர் படத்துக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்த பாடல் காட்சி பெரிய அளவில் ரசிகர்களிடம் டிரண்டிங் ஆனது. குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் விநாயகன் நடிப்பு வேற லெவலில் இருந்தது. வர்மன் கேரக்டரில் அவர் வாழ்ந்து காட்டி ரசிகர்களை மிரட்டி இருந்தார்.

ஜெயிலர் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு ஜெயிலர் 2 படத்தை தயாரிக்க அப்போதே சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்வந்தது. ரஜினிகாந்த் அனிருத் மற்றும் நெல்சன் ஆகியோருக்கு விலை உயர்ந்த லக்ஸரி கார்களை பரிசளித்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினியிடம் பேசி ஒப்புதல் பெற்றார். ஏனெனில் ரஜினி இதுவரை அவரது எந்த படத்திலும் 2ம் பாகத்தில் நடித்தது இல்லை. ஜெயிலர் 2 தான் முதல் படமாக உள்ளது.

- Advertisement -

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. இதை படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று துவங்கிய படப்பிடிப்பு சென்னையிலும் அதைத் தொடர்ந்து ஐதராபாத்திலும் நடக்க உள்ளது. முதல் கட்டமாக ரஜினிகாந்த் 15 நாட்கள் கால்ஷீட் தந்திருக்கிறார்.

சென்னையில் நடக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் 5 நாட்கள் பங்கேற்கும் நடிகர் ரஜினிகாந்த் பிறகு ஐதராபாத்தில் நடக்கும் படப்பிடிப்பில் 10 நாட்கள் கலந்துக் கொள்கிறார். அதன்பிறகு செப்டம்பர் மாதம்தான் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்க உள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் இனி வரும் நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்