தமிழகத்தின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அண்ணாத்தை திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில், மோகன்லால் என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். அண்மையில் நடைபெற்று முடிந்த ஜெயிலர் படப்பிடிப்பினை அடுத்து தற்போது இந்த படத்தின் ரிலீஸ்-சுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.
ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. னி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “காவலா” பாடல் கடந்த வாரம் 6-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது.
இந்த நிலையில், இரண்டாவது சிங்ங்கில் நேற்று முன் தினம் 6 மணிக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பாராத காரணங்களுக்கான அன்று இரண்டாவது சிங்கிள் வெளியாகவில்லை. இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘இது டைகரின் கட்டளை’ பாடல் வருகிற 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
Goosebumps guaranteed #HukumPreview is here!🔥#Hukum ready to 💥🌪️ from Aug 17th @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @soupersubu #Jailer #JailerSecondSingle pic.twitter.com/TIER1OZsJy
— Sun Pictures (@sunpictures) July 15, 2023
நிலவரம் இப்படி இருக்க, பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்துவருகின்றனர். ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.தற்போது’இது டைகரின் கட்டளை’ பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





