நடிகர் சிலம்பரசன் இப்போது அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் ஒரு ஷெட்யூல் நடந்து முடிந்துள்ளது. பொங்கலுக்கு முன்பு கோவில்பட்டியில் ஒரு மாதம் வரை இந்த படப்பிடிப்பு நடந்த நிலையில் சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு தங்கி படப்பிடிப்பை நடத்தி முடித்தனர்.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடப்பதாகவும் அதற்காக பிராமண்ட செட் அமைக்கும் பணிகள் நடப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க கமிட் ஆகி பிறகு கால்ஷீட் இல்லாததால் விலகி விட்டார். அவருக்கு பதிலாக தெலுங்கு நடிகர் ராணா டகுபதி நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் ஆண்ட்ரியா கிஷோர் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்த யோகேஸ்வரி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படம் வடசென்னை பட பாணியில் இருக்கும் என்றும் ஏற்கனவே இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். ராணா டகுபதி இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க அதிக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் அடுத்து நடிக்க உள்ள படத்தை அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்கிறார். இது கடந்த ஆண்டு பிப்ரவரியில் எடுக்கப்பட்ட முடிவு. ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் படப்பிடிப்பை துவங்கவில்லை. அரசன் படத்துக்கு பின் இந்த படத்தில் சிம்பு நடிக்க அதிக வாய்ப்புள்ளது.
ஓ மை கடவுளே டிராகன் வெற்றிப் படங்களை கொடுத்த அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க 2 கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிரபல பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் மற்றும் தெலுங்கு நடிகை மீனாட்சி சௌத்ரி ஆகியோரிடம் படக்குழு தரப்பில் பேச்சுவார்த்தை நடக்கிறது.
ஆனால் இந்த படத்தில் அந்த 2 பேரில் ஒருவர் கதாநாயகியா அல்லது 2 பேருமே நடிக்கிறார்களா என்ற தகவல் உறுதி செய்யப்படவில்லை. இதில் நடிகை மிருணாள் தாகூர் சமீபத்தில் நடிகர் தனுஷூடன் கிசுகிசுக்கப்பட்டவர். தனுஷ் மிருணாள் தாகூர் காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.





