- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகனில் காவலராக வந்து அசத்தும் விஜய்... பிறந்தநாளன்று வெளியான தெறி வீடியோ... கொண்டாடி தீர்க்கும் தளபதி...

ஜனநாயகனில் காவலராக வந்து அசத்தும் விஜய்… பிறந்தநாளன்று வெளியான தெறி வீடியோ… கொண்டாடி தீர்க்கும் தளபதி ரசிகர்கள்…

- Advertisement -

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே மோஸ்ட் வான்டட் ஹீரோவாக இருப்பவர் விஜய். தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கி, திரை உலகில் வசூல் சக்கரவர்த்தியாக அவர் இருந்து வருகிறார். நடிப்பு ஒரு பக்கம் நற்பணி மன்றம் ஒரு பக்கம் என ஆரம்பம் முதலே இரு பக்கமும் கவனம் செலுத்தி வந்த அவர், சில முக்கியமான நிகழ்வுகளிலும் பங்கேற்றுகிறார்.

கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்யின் அரசியல் வருகை பற்றி பலர் கூறி வந்த சூழலில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அரசியலில் இறங்கி இருப்பதை உறுதி செய்தார் விஜய். தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்றும் அவர் பெயர் வைத்தார். அப்போது 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதுதான் தனது இலக்கு என்று விஜய் கூறியிருந்தார்.

- Advertisement -

அதேசமயம் திரைத்துறையில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும், இனி முழுக்க முழுக்க அரசியல்தான் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். தான் ஒப்புக்கொண்ட திரைப்படங்களில் மட்டும் அவர் நடித்துக் கொடுக்க திட்டமிட்டு பணியாற்றி வருகிறார். அதன்படி தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து முடித்த அவர் தற்போது ஜனநாயகன் படத்திலும் பணியாற்றி இருக்கிறார்.

அஜித் குமாரை வைத்து நேர்கொண்ட பார்வை வலிமை மற்றும் துணிவு என மூன்று திரைப்படங்களை எடுத்த எச் வினோத்தான், இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி என மூன்று பெண் கதாபாத்திரங்கள் படத்தில் இருக்கிறார்கள். பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், நரேன் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

- Advertisement -

விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னையை அடுத்த பையனூரில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றன. கொடைக்கானலிலும் சில காட்சிகளை படமாக்கினார்கள். இப்படியான சூழலில் விஜய் தனது 51 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அதை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஜனநாயகன் திரைப்படத்திலிருந்து க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இருக்கிறது.

அதில் என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற வசனத்துடன் வீடியோ ஆரம்பிக்கிறது. கையில் நீண்ட வாளுடன் கண்ணாடி அணிந்து போலீஸ் அதிகாரி கெட்டப்பில் வருகிறார் விஜய். மீசையை திருக்கிவிட்டபடி அவர் வாளால் சீவி விடும் காட்சி, மாஸாக அமைந்துள்ளது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

- Advertisement -

சற்று முன்