- Advertisement -
Homeபொழுதுபோக்குஎத்தனை குண்டு போட்டாலும், இந்த ஜப்பானை அழிக்க முடியாதுடா - பஞ்ச் டயலாக்குடன் கார்த்தி நடித்த...

எத்தனை குண்டு போட்டாலும், இந்த ஜப்பானை அழிக்க முடியாதுடா – பஞ்ச் டயலாக்குடன் கார்த்தி நடித்த ஜப்பான் படத்தின் டீசர் வெளியீடு

- Advertisement -

நடிகர் கார்த்தி, மிகப்பெரிய திருடனாக ஜப்பான் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் படம்தான் ஜப்பான் என்பதை, இன்று மாலை வெளியான அந்த படத்தின் டீசர் தெளிவுப்படுத்தி விட்டது. நான்கு மாநிலங்களைச் சேர்ந்த போலீசார் தேடும் மிகப்பெரிய கொள்ளைக்காரனாக இந்த படத்தில் கார்த்தி அலப்பரை செய்திருக்கிறார் என்பதும் உறுதியாகிறது. வழக்கமான கெட்டப்பில் இருந்து முற்றிலும் வேறுபட்டு தெரிகிறார் கார்த்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ள 24வது படம்தான் ஜப்பான். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அனு இமானுவேல், சுனில், கே.எஸ் ரவிக்குமார், விஜய் மில்டன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

ஜப்பான் டீசரில், பல இடங்களில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்து ஏராளமான பணம், நகை, பொருட்கள் கொள்ளையடிக்கப்படுகிறது. அங்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிடும் போலீசார், சம்பவத்தை பார்த்தா ஜப்பானோட வேலைதான் போல இருக்கு என்ற வசனம் வருகிறது.

சிட்டிக்கு நடுவே, இவ்வளவு பெரிய ஓட்டையை போட்டு ஒருத்தன் 200 கோடி ரூபாய் பொருளை திருடீட்டு போயிருக்கான்னா, அப்புறம் என்னய்யா சட்டம் ஒழுங்கு மண்ணாங்கட்டி என, கோபமாக கேஎஸ் ரவிக்குமார் போலீசாரை திட்டுகிறார்.

இந்தியா முழுக்க, ஜப்பான் மேல 182 கேஸ் இருக்குது சார். அவன் பண்ணனுதலேயே இதான் பெரிய சம்பவம், நாலு ஸ்டேட் போலீஸ் அவனை தேடீட்டு இருக்குது, இன்னும் அவன் சிக்கல போன்ற வசனங்கள் டீசரில் இடம்பெற்று, இதில் பயங்கர கொள்ளைக்காரன் கேரக்டரில் கார்த்தி நடித்திருப்பதையே காட்டுகிறது.

ஜப்பான் படத்தை பொறுத்தவரை ஒரு உல்லாசவாசியாக, பெரிய கொள்ளைக்காரனாக கார்த்தி நடித்திருப்பது இதுவே முதல்முறை. அவரது கெட்டப் குறிப்பாக பற்களின் கறையோடு அவரது தோற்றமே வேறு மாதிரியாக இருக்கிறது. படத்தில் நிறைய தரமான சம்பவங்கள் இருப்பதையும் படத்தின் டீசர் பிரதிபலிக்கிறது. கார்த்தி ரசிகர்கள், இந்த டீசரை வைரலாக்கி வருகின்றனர்.

சற்று முன்