- Advertisement -
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். முதல் படமே பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் விஜய் நடித்த பீஸ்ட் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் ஜெயிலர் 2 ஆகிய படங்களை இயக்கினார். இதில் பீஸ்ட் படம் தவிர மற்ற படங்கள் எல்லாமே பிளாக்பஸ்டர் படங்களாக வெற்றி பெற்றன. அதுவும் ஜெயிலர் 2 சக்கைப்போடு போட்டு வருகிறது. அதனால் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் பிளாப் குறித்து கலாய்க்கும் நெட்டிசன்கள், பீஸ்ட் படம் ஏன் ஓடலேன்னு இப்ப தெரியுதா? நெல்சனுக்கு படம் எடுக்க தெரியும், ஆனா விஜய்க்கு நல்லா நடிக்க தெரியாது என்று விமர்சித்து வருகின்றனர்.





