நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ஒரு புதிய படத்தை அவர் டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் விஜய் போல் அவரது மகனும் சினிமாவில் அதிரடி கதாநாயகனாக களம் இறங்குவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவர் அவரது தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் போல இயக்குனராக களத்தில் குதித்து விட்டார்.
படப்பிடிப்பு தளத்தில் ஜேசன் சஞ்சய் மிகவும் அமைதியாக பொறுமையாக நிதானமாக செயல்படுகிறார். அவரது அப்பா விஜயை போலவே பல நேரங்களில் மிகவும் அமைதியான மனிதராகவே அவர் காணப்படுகிறார். குறிப்பாக மற்ற இயக்குனர்களைப் போல ஷூட்டிங் ஸ்பாட்டில் அலட்டிக் கொள்வது பந்தா செய்வது இல்லை.
மேலும் ஆக்சன் கட் சொல்லும்போது கத்துவது, மைக்கில் நடிகர்களை திட்டுவது திருத்தம் சொல்வது போன்ற எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மிகவும் அமைதியான முறையில் அவர் படப்பிடிப்பை நடத்துவதை பார்த்து படக் குழுவினர் ஆச்சரியத்தில் உள்ளனர். அதே போல் எந்த காட்சியை எப்படி எடுக்க வேண்டுமே அப்படி சரியாக திட்டமிட்டு எடுத்து முடித்து விடுகிறார். யாருடைய நேரத்தையும் வீணடிப்பது இல்லை.
மேலும் பெரிய நட்சத்திர நடிகர் மகனாக இருந்தும் வசதியான வீட்டுப் பிள்ளையாக வளர்ந்தும் ஜேசன் சஞ்சய் நட்சத்திர ஓட்டலில் உணவு வரவழைத்து சாப்பிடுவதில்லை. புரடக்சன்ஸ் தரப்பில் வழங்கப்படும் உணவையே அவரும் சாப்பிடுகிறார். எளிமையான உணவுகளை தான் எடுத்துக் கொள்கிறார். இது படக்குழுவினர் மத்தியில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் ஷூட்டிங் இலங்கையில் நடத்தப்படுகிறது. மொத்தம் 20 நாட்கள் இலங்கையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு ஜேசன் சஞ்சய்க்கு எப்படி கிடைத்தது என்ற புதிய தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி ஜேசன் சஞ்சயின் அம்மா சங்கீதாவின் தங்கை மூலமாக தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதாவது சங்கீதாவின் தங்கையும் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பாளர் சுபாஸ்கரனும் நெருங்கிய நட்பில் இருப்பவர்கள். அதனால் சங்கீதாவின் தங்கைதான் ஜேசன் சஞ்சயிடம் நல்ல கதை உள்ளது. அவரது படத்தை தயாரியுங்கள். அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை தயாரிக்க லைகா முன்வந்திருக்கிறது. மேலும் இந்த படத்தை வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிட படக்குழு தரப்பில் முடிவு செய்துள்ளனர் என்ற புதிய தகவலும் கிடைத்துள்ளது.





