- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது, அப்படி ஒரு கதையில் ஜெயம் ரவி நடிக்கப் போறாரா? கேட்ட உடனே கதையை ஓகே...

என்னது, அப்படி ஒரு கதையில் ஜெயம் ரவி நடிக்கப் போறாரா? கேட்ட உடனே கதையை ஓகே பண்ணிட்டாராமே… – இந்த படமாவது ஓடுமா ப்ரோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கிய ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி தனி ஒருவன் போகன் அடங்கமறு பேராண்மை சந்தோஷ் சுப்ரமணியம் உனக்கும் எனக்கும் என பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இறைவன், அகிலன், சைரன் 108 என தொடர் தோல்வி படங்களை தந்த ஜெயம் ரவி, இப்போது வெளியான அவரது பிரதர் படமும் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. என்னிடம் கதையை சொல்லுவது போல், அதை சரியாக படமாக்குவது இல்லை என தன் படங்களின் தொடர் தோல்விக்கு இயக்குனர்களை குறை சொல்லி இருந்தார் நடிகர் ஜெயம் ரவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எனினும் ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் என மெகா ஹிட் வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் எம் ராஜேஷ். அவரது இயக்கத்தில் வெளியான பிரதர் படம் நிச்சயமாக ஜெயம் ரவிக்கு வெற்றியை தரும் என்று எதிர்பார்த்த நிலையில், தீபாவளிக்கு வெளியான பிரதர் படம் பல தியேட்டர்களில் சில நாட்களிலேயே தூக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக லக்கி பாஸ்கர் படம் மாற்றபப்ட்டுள்ளது.

இதற்கிடையே குடும்ப வாழ்க்கையில் சறுக்கலை சந்தித்துள்ள நடிகர் ஜெயம் ரவி, தன் காதல் மனைவி ஆர்த்தியை பிரிவாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். 2009ம் ஆண்டில் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்த ஜெயம் ரவிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இவரது இந்த திடீர் அறிவிப்பு திரையுலகில் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கலும் செய்திருக்கிறார்.

- Advertisement -

மனைவி மற்றும் மனைவி குடும்பத்தார் தன்னை பல விதங்களில் டார்ச்சர் செய்ததாகவும், வங்கி கணக்கு, மொபைல் போனில் இன்ஸ்டாகிராம் கணக்கு கூட தன் பெயரில் இல்லை என்று தெரிவித்த ஜெயம் ரவி, வீட்டில் வேலைக்காரர்கள் முன்னிலையில் கூட நான் பலமுறை அவமானப்படுத்தப்பட்டேன் என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்த சூழலில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அருள் சக்தி முருகன் என்பவரது இயக்கத்தில் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தின் கதையை கேட்ட உடனே ஓகே சொல்லி இருக்கிறார். இதற்கு காரணம், அது கணவன் மனைவி இடையிலான குடும்ப பிரச்னைகளை மையப்படுத்திய கதை. இறுதியில் கணவன், மனைவி இருவரும் விவாகரத்து பெற்று பிரிகிறார்கள். இது தன் வாழ்க்கையை கதை போன்றே இருப்பதால், தனது பயோபிக் போல நினைத்து உடனே கால்ஷீட் தந்திருக்கிறார் ஜெயம் ரவி.

- Advertisement -

சற்று முன்