- Advertisement -
Homeபொழுதுபோக்குஆம்புலன்ஸ் டிரைவர் டூ சிறை கைதி... பக்கா என்டர்டெயின்மெண்டாக களம் இறங்கும் சைரன் திரைப்படம்... தப்பிப்பாரா...

ஆம்புலன்ஸ் டிரைவர் டூ சிறை கைதி… பக்கா என்டர்டெயின்மெண்டாக களம் இறங்கும் சைரன் திரைப்படம்… தப்பிப்பாரா ஜெயம் ரவி?…

- Advertisement -

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், மன்னருக்கே உண்டான மிடுக்கான தோற்றத்தில் சாந்தமாக நடித்து பலரது பாராட்டையும் பெற்றார். படத்தில் அவரது வசன உச்சரிப்பும் மிக நன்றாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர். அந்த திரைப்படத்தின் மூலம் ஜெயம் ரவியின் கிராஃப் உயர்ந்தது என்றே கூறலாம்.

ஆனால் இந்த திரைப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து படுதோல்வியை சந்தித்தனர். இதில் அகிலன் திரைப்படம் வந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து பூலோகம் திரைப்படத்தை இயக்கியிருந்த கல்யாண கிருஷ்ணன் தான் இந்த படத்தை எடுத்திருந்தார். ஆனால் படத்தில் எந்த ஒரு காட்சிகளும், ஒட்டாத வகையில் எடுக்கப்பட்டதால் அந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

- Advertisement -

பிறகு, ஜெயம் ரவி நயன்தாரா நடிப்பில் இறைவன் திரைப்படம் வெளியானது. வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அகமது இந்த படத்தை எடுத்திருந்தார். சைக்கோ திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், தோல்வி அடைந்தது. மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் வெளியாகி இருந்த சூழலில், யூகிக்கக்கூடிய திரைக்கதை காரணமாக படம் எடுபடவில்லை.

இப்படி அடுத்தடுத்து இரண்டு தோல்வி திரைப்படங்களை ஜெயம் ரவி கொடுத்திருந்தாலும், அவர் படங்களின் பிஸியாக தான் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ராஜேஷ் உடன் அவர் பிரதர் எனும் படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

இது போக ஜெனி என்னும் திரைப்படத்திலும் ஜெயம் ரவி நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் எடுக்கும் இந்த திரைப்படம், மூன்று கதாநாயகிகள் உடன் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை திரைப்படத்திலும் ஜெயம் ரவி பணியாற்றி வருகிறார். மணிரத்னம் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் தக் லைப் படத்திலும் ஜெயம் ரவிக்கு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நடித்திருக்கும் சைரன் திரைப்படம் வரும் 16ஆம் தேதி வெளியாகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் அனுபமா பரமேஸ்வரன் யோகி பாபு நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. படத்தை ஆண்டனி பாக்யராஜ் என்பவர் இயக்கியுள்ளார். ஆம்புலன்ஸ் ஓட்டுனராக இருக்கும் போது கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை அனுபவிக்கும் ஜெயம் ரவி தனது மகளை பார்க்க செல்வது போன்ற காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. ரசிகர்களை ஒட்டுமொத்தமாக இந்த ட்ரெய்லர் கவர்ந்திருக்கும் சூழலில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

சற்று முன்