சமீபகாலமாக மிகப்பெரிய வெற்றியை நடிகர் ஜெயம் ரவி கொடுக்கவில்லை என்றாலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. 2023 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான அகிலன் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
ஏன் பலருக்கும் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆனது கூட தெரியாது என்று கூறலாம். இதன்பிறகு, இறைவன் என்னும் திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்தார். கிரைம் திரில்லர் படமாக எடுக்கப்பட்ட இதில் கதாநாயகியாக நயன்தாரா வந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
பிறகு, இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் என்னும் திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படமும் ஓடவில்லை. இப்படி தோல்வி திரைப்படங்களை அவர் கொடுத்துக் கொண்டிருந்தாலும், அடுத்தடுத்து ஜெயம் ரவிக்கு படங்கள் ரிலீசில் காத்திருக்கின்றன.
அவரது நடிப்பில் வரும் தீபாவளிக்கு பிரதர் என்னும் திரைப்படம் வெளியாகிறது. சிவா மனசுல சக்தி பாஸ் என்கிற பாஸ்கரன் ஒரு கல் ஒரு கண்ணாடி என அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த ராஜேஷ் தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால் முதல் மூன்று திரைப்படங்களுக்கு பிறகு அவர் எந்த ஒரு வெற்றி திரைப்படத்தையும் கொடுக்கவில்லை.
இதனால் பிரதர் திரைப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லை. இதன் பிறகு ஜீனி என்னும் படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். மிஷ்கினின் உதவியாளர் தான் இந்த படத்தை இயக்குகிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதே போல் உதயநிதி மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கும் காதலிக்க நேரமில்லை திரைப்படத்திலும் ஜெயம் ரவி நடித்துள்ளார்.
இந்த நிலையில் அண்மைகாலமாக மும்பையிலேயே தங்கி இருக்கிறார் ஜெயம் ரவி. தனது மனைவியை பிரிந்திருக்கும் அவர், மும்பையில் தங்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு பாலிவுட் படங்களிலும் நடிக்க அவருக்கு அழைப்பு வந்திருப்பதாக தெரிகிறது. இதில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.





