- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் அப்படிப்பட்டவரா? உண்மையை அவருக்கு முன்பே போட்டுடைத்த நடிகர் விஜய் சேதுபதி -...

இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் அப்படிப்பட்டவரா? உண்மையை அவருக்கு முன்பே போட்டுடைத்த நடிகர் விஜய் சேதுபதி – அப்பவே அப்படி இருந்திருக்காரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார். புத்தம்புது பயணம், புரியாத புதிர் போன்ற படங்களை இயக்கிய தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த அவர் சேரன் பாண்டியன், நாட்டாமை, படையப்பா, நட்புக்காக, அவ்வை சண்முகி, முத்து போன்ற மெகா ஹிட் படங்களால் முன்னணி இயக்குனரானார்.

இப்போது படங்களை இயக்குவதை குறைத்துக்கொண்டு, குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். போலீஸ் அதிகாரி, ஹீரோ அப்பா, அரசியல்வாதி என எந்தவிதமான கேரக்டரிலும் சிறந்த நடிப்பை கேஎஸ் ரவிக்குமார் வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார், ஷூட்டிங் ஸ்பாட்டில் கண்டபடி வார்த்தைகள் பேசுவார், உதவி இயக்குனர்களை திட்டுவார் என்று பலரும் கூறியதுண்டு. குறிப்பிட்ட நேரத்துக்குள், படப்பிடிப்பை முடித்து குறுகிய நாட்களில் படத்தை முடிப்பதில் கில்லாடி என்றும் கேஎஸ் ரவிக்குமார் பெயர் வாங்கியவர். அதனால் அவரது இயக்கத்தில் நடிக்க ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களே ஆர்வம் காட்டினர்.

பெரும்பாலான படங்களில் கேஎஸ் ரவிக்குமார் வில்லன் கேரக்டரில்தான் நடித்திருப்பார். அவர் இயக்கிய படங்களில் சில படங்களில் அவர்தான் வில்லனாக நடித்திருந்தார். அதே போல் அவர் இயக்கிய படத்தில் ஏதேனும் ஒரு காட்சியில் கேமியோ ரோல் செய்து விடுவதும் கேஎஸ் ரவிக்குமாரின் வழக்கமாக உள்ளது. ஆனால் சமீபமாக அவர் படங்கள் எதுவும் இயக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் விடுதலை 2 படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் பிரமோ நிகழ்ச்சிக்காக அந்த படத்தில் நடித்த விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியார் உள்ளிட்டோர் நேர்காணல்களில் பங்கேற்று வருகின்றனர். அப்போது ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் குறித்த ஒரு விஷயத்தை பகிரங்கமாக பேசியிருக்கிறார்.

இதுகுறித்து நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, நான் கேஎஸ் ரவிக்குமார் சார் படிச்ச காலேஜ்ல தான் படிச்சேன். அப்போது நான் 2வது வருஷம் படிச்சிட்டு இருந்தேன். அப்போ டிடி என்ற ஒரு பேராசிரியர் இருந்தார். அப்போ கிளாஸ்ல ஒரு பையன் பயங்கரமா சேட்டை, கலாட்டா பண்ணிட்டே இருந்தேன். அப்போ அந்த வாத்தியார் அந்த பையன்கிட்ட, ஏண்டா நீ என்ன கேஎஸ் ரவிக்குமாரை விட பெரிய ரவுடியாடா என்று கேட்டார், என்று கூறியிருக்கிறார். அப்போது அங்கு கேஎஸ் ரவிக்குமாரும் இதைக்கேட்டு சிரித்துக்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்