பீஸ்ட் பட தோல்விக்கு பிறகு நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இணைந்து லியோ திரைப்படத்தின் நடித்தார். இந்தத் திரைப்படம் கடந்த மாதம் 19 ஆம் தேதி வெளியானது. இதன் முதல் பாதி சூப்பராக இருப்பதாகவும், இரண்டாம் பாதியில் சுமாராக உள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இதனை அதன் இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் ஒப்புக்கொண்டார். அதேசமயம் இரண்டாம் பாதியில் வெளியான பிளாஷ்பேக் காட்சிகள், கற்பனை என்றும் கூறிக்கொண்டு குண்டை தூக்கிப் போட்டார். இது இப்படி இருக்க, லியோ திரைப்படம் வசூலில் எந்த குறையும் வைக்காமல் வெற்றி நடை போட்டது. ஒரே வாரத்தில் 461 கோடி ரூபாய் வசூல் செய்ததாக, படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். இசை வெளியீட்டு விழா ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்ததால், வெற்றி நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், தளபதி விஜய் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
வெங்கட் பிரபு இயக்கும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. புதிய கீதைக்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் பட பூஜை சிம்பிளாக நடைபெற, அதன் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதில் விஜய் உடன் பிரசாந்த் பிரபுதேவா ஆகியோர் நடிக்கின்றனர். வில்லனாக மைக் மோகன் வருகிறார்.
சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் உள்ளனர். இதில் இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கிறாராம். இதற்காக ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த படக்குழு சமீபத்தில் கலிபோர்னியா சென்று வந்தது. முதலில் படத்தில் இருந்து பாடல் சூட் செய்யப்பட்டது. யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் அந்த பாடலை பாடி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை எடுத்து தாய்லாந்து நாட்டில் தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
அதில் முக்கியமான சண்டைக் காட்சிகள் சூட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தளபதி 68 ல் இடம்பெற்றுள்ள மலையாள நடிகர் ஜெயராம் தனது கதாபாத்திரம் குறித்து பேசி இருக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தில் சிவராஜ்குமாருக்கு எப்படி ஒரு கதாபாத்திரம் இருந்ததோ, அதேபோல் எனக்கும் இதில் முக்கியமான ரோல் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை கவனித்துள்ள ரசிகர்கள், ஒருவேளை அவருக்கு தாதா கதாபாத்திரம் இருக்குமோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய் – ஜெயராம் இருவரும் துப்பாக்கி படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.





